கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் கனமழை கொட்டும்.. வானிலை மையம் கணிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் தென்கிழக்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாவதால் தமிழகத்தில் வரும் 8, 9, 10 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. தென் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்தது. தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று மதியம் கனமழை பெய்தது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் கடையம், அம்பாசமுத்திரம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் காலையில் வெயில் அடித்தாலும் மதியம் 1 மணியளவில் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில் இன்று மற்றும் வரும் 8, 9, 10 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கோவை, திருப்பூர், நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று வரும் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வரும் 8, 9 , 10ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications