டெல்டாவை மொத்தமாக புரட்டி போட்ட மழை! இரவு பெரிய சம்பவம் இருக்கு!
சென்னை: டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு டெல்டாவில் கனமழை பெய்ததால், மக்கள் சற்று நிம்மதியடைந்திருக்கிறார்கள். இந்நிலையில், இன்றிவு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழை கை கொடுக்கவில்லை. சீரான இடைவெளியில்.. சிறப்பாக பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் மொத்தமாக கொட்டிவிட்டு போய்விடுகிறது.

வட மாநிலங்களில்தான் இப்படி எனில், தமிழ்நாட்டில் அந்த மழை கூட இல்லை. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், காவிரியில் நீர் வரத்து குறைந்தது. இதனால் கர்நாடகா நமக்கு தேவையான நேரத்தில் தண்ணீரை கொடுக்கவில்லை. எனவே மேட்டூருக்கு தண்ணீர் வரவில்லை.. டெல்லா முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டது.
சூழல் இப்படி இருக்கையில், இன்று டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை என.. மொத்த டெல்டாவும் மழையால் நனைந்திருக்கிறது. இந்த மழை மேகம், அடுத்ததாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளுக்கு நகரும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இரவு திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களிலும் அதை தொடர்ந்து கோவை, திருப்பூர், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "இன்று (05-09-2026) சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மயிலாடுதுரை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
06-09-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
