சென்னையில் இரவில் இடி, மின்னலுடன் விட்டு விளாசிய கனமழை.. சாலைகளில் தேங்கிய வெள்ளம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மாலை முதலே லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. இந்நிலையில் இரவு 10 மணியளவில் பரவலாக கனமழை பெய்யத் தொடங்கியது. இடி, மின்னலுடன் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது.

சென்னை எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், வடபழனி என மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சோழிங்கநல்லூர் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

Heavy rain lashing Chennai IMD warned that it will continue unabated until 1 AM

மழை இயல்பை விட குறைவு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாகவே பெய்துள்ளது. சென்னையிலும் மழை குறைவு தான். கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் சென்னையில் 24.49 செமீ மழை பெய்து உள்ளது. இது இயல்பை விட 8 சதவீதம் குறைவாகும். இதே போன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 19.56 செமீ மழை பெய்துள்ளது. காஞ்சிபுரத்தில் 17.2 செமீ, செங்கல்பட்டில் 7.6 செமீ மழை பெய்துள்ளது. தமிழகம் முழுக்க என்று பார்த்தால் 15.11 செமீ மழை பதிவாகியுள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை மற்றும் மதிய நேரங்களில் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மதியத்திற்கு பிறகு அப்படியே கிளைமேட் மாறி காற்று பலமாக வீசியது. ஒரு சில இடங்களில் லேசான மழை கொட்டியது.

மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இரவில் சென்னை நகரின் பல இடங்களில் பரவலாக மழை கொட்டியது. இந்நிலையில் இரவு 10 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டத் தொடங்கியது. சென்னை எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, சூளைமேடு, சோழிங்கநல்லூர் என பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

சோழிங்கநல்லூரில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இரவில் திடீரென வெளுத்து வாங்கிய மழையால் சென்னை நகரம் குளிர்ந்து போனது. இதே போன்று செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+