அடுத்த 1 மணி நேரத்திற்கு வெளுத்து எடுக்கப் போகும் மழை.. 11 மாவட்டங்களுக்கு ”ஆரஞ்சு” அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கோடைக்காலம் சீசன் நிலவினாலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு பரவலாக தென் மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக மழை வெகுவாக குறைந்தது. வெயில் கொளுத்தி எடுத்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஒருசில இடங்களில் மழை பெய்தது.

heavy-rain-likely-in-11-districts-in-next-1-hour-meteorological-department-issues-orange-alert

11 மாவட்டங்கள்

கிருஷ்ணகிரி, நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இன்றும் பகல் நேரங்களில் வெயிலே கொளுத்தி எடுத்தது. எனினும் மாலை நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. ஆலங்கட்டி மழையும் ஒருசில பகுதிகளில் பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல் மற்றும் தேனி என 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காற்றுடன் மழைக்கு சான்ஸ்

திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை கொட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக ஒருசில இடங்களில் சாலையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கலாம் என்றும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஒரு வாரத்திற்கு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

7 ஆம் தேதி வரை மழை

நாளை தொடங்கி மே மாதம் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் மே மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பெய்யக்கூடும். மற்ற இடங்களிலும், புதுவை மற்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

வரும் மே 6 மற்றும் 7 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்து இன்று முதல் வரும் மே 4 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும். மே 5 ஆம் தேதி முதல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் சற்று குறையக் கூடும்.

இன்று முதல் 3 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 4 மற்றும் 5 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

இன்றும் நாளையும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசெளகரியம் ஏற்படலாம்.

மழை அளவு (செமீ)

* கிளன்மார்கன் (நீலகிரி) 3,
* தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), கூடலூர் பஜார் * (நீலகிரி), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி) தலா 2,
* தளி (கிருஷ்ணகிரி), நாங்குனேரி (திருநெல்வேலி), ஒசூர் AWS (கிருஷ்ணகிரி), சாத்தான்குளம் * (தூத்துக்குடி), நடுவட்டம் (நீலகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), ஓசூர் (கிருஷ்ணகிரி) தலா 1.

வெப்பநிலை நிலவரம்:

அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த வரை வேலூரில் 40.5° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 23.5° செல்சியஸ் வெயில் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 1-2 செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

வட தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-41* செல்சியஸ், தென் தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-38 செல்சியஸ், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 33-35° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-36° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 21-28° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+