Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த 2 மணி நேரத்தில்.. கோவை டூ குமரி வரை 15 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை.. வானிலை அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் கோவை முதல் குமரி வரை 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நெல்லை, தென்காசி, திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து எடுக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று காலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் வெயிலே அடித்தது. நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருப்பினும் மதிய நேரங்களில் வெயில் வெளுத்து எடுத்தது.

heavy-rain-likely-in-15-districts-from-coimbatore-to-kumari-in-next-2-hours

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இதேபோன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வெப்பநிலைல் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில், "தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை கோவை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருச்சி, ராமநாதபுரம்

இதேபோன்று நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

* இதன் காரணமாக 29-04-2025 மற்றும் 30-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 01-05-2025 முதல் 03-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 04-05-2025 மற்றும் 05-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னையில் 2 நாட்கள் எப்படி

* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, இன்று (29-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

* சென்னையில் நாளை (30-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

* அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: 29-04-2025 முதல் 02-05-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
03-05-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
29-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

* 30-04-2025 முதல் 03-05-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
29-04-2025 முதல் 01-05-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

வெப்பநிலை நிலவரம்:

* அதிகபட்ச வெப்பநிலை:- கரூர் பரமத்தி: 39.0° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி: 22.0° செல்சியஸ்
* கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் குறைந்தும், ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் உயர்ந்தும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரிய மாற்றமின்றியும் பதிவாகியுள்ளது.

* அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
* வட தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-39° செல்சியஸ், தென் தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-37° செல்சியஸ், கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-36° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 22-28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மழை அளவு (செமீ):

* ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை) 10,
* பூதலூர் (தஞ்சாவூர்) 7,
* மண்டபம் (ராமநாதபுரம்) 6,
* திருவாடானை (ராமநாதபுரம்) 5,

* திற்பரப்பு (கன்னியாகுமரி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), சோலையார் (கோயம்புத்தூர்), மஞ்சளாறு (தேனி) தலா 4,
* பாம்பன் (ராமநாதபுரம்), கே.எம்.கோயில் (கடலூர்), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), கழுகுமலை (தூத்துக்குடி), திருமானூர் (அரியலூர்), லால்பேட்டை (கடலூர்) தலா 3,

* மதுக்கூர் (தஞ்சாவூர்), களியல் (கன்னியாகுமரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), பெரியாறு (தேனி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), சிற்றாறு-I (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 2,
* அணைகெடங்கு (கன்னியாகுமரி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), கேத்தி (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), செருமுள்ளி (நீலகிரி), தொண்டி (ராமநாதபுரம்), மணல்மேடு ARG (மயிலாடுதுறை), மணல்மேடு (மயிலாடுதுறை), கன்னிமார் (கன்னியாகுமரி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள், அரபிக்கடல் பகுதிகள் & வங்கக்கடல் பகுதிகள்: 29-04-2025 முதல் 03-05-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+