சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட உள்மாவட்ட பகுதிகளிலும் மழை தீவிரமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் இன்று மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் முடிவடைந்துள்ளது. எனினும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நெல்லை, திருச்சி, குமரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை என பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இன்றும் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று 17 மாவட்டங்களில் கனமழை கொட்டும்
சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளம் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
நாளை தமிழகத்தில், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
நெல்லை, தென்காசியில் கனமழை வெளுக்கும்
02-06-2026 மற்றும் 03-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நெல்லை மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
04-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். 05-06-2026 மற்றும் 06-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை
31-05-2026 மற்றும் 01-06-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும்.
சென்னையில் மழை பெய்யும்
சென்னையில் இன்று (31-05-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (01-06-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
31-05-2026 முதல் 04-06-2026 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
31-05-2026: அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கிலோ மீட்டர் வேகத்திலும்
01-06-2026 மற்றும் 02-06-2026: அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03-06-2026: அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04-06-2026: அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
31-05-2026: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கேரளம் கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
01-06-2026 மற்றும் 02-06-2026: கேரளம் கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03-06-2026 மற்றும் 04-06-2026: கேரளம் கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
ஊத்து (திருநெல்வேலி) 7. நாலுமுக்கு (திருநெல்வேலி) 6, காக்காச்சி (திருநெல்வேலி) 5. தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), ஆத்தூர் (சேலம்) தலா 4, மாஞ்சோலை (திருநெல்வேலி), திற்பரப்பு (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை) தலா 3, ஆலங்காயம் (திருப்பத்தூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி). அருப்புக்கோட்டை (விருதுநகர்). அடையாமடை (கன்னியாகுமரி), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்) தலா 2 செமீ மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications