நீலகிரி, கோவை, தேனி உள்பட 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் ஜில் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் கோவை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: வட உள்கர்நாடகத்தில் இருந்து "குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 3 ஆம் தேதியான இன்று நீலகிரி, தேனி, திருவண்ணாமலை விழுப்புரம் மற்றும் கடலூ மாவட்டங்கள், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

TamilNadu Weather Heavy Rain Weather Alert

இதர மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்சமாக காரைக்க 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. நாகை 100.4, புதுச்சேரி 100.22 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்தில் இன்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+