வானிலை மாறுது.. வரப்போகுது மீண்டும் கனமழை.. தமிழகத்தில் 8ம் தேதி நல்ல சம்பவம் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்​கக்​கடல் பகுதியில் மேற்கு திசை காற்​றின் வேக மாறு​பாடு காரண​மாக தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று முதல் செப்​டம்பர் 7-ம் தேதி வரை இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். ராம​நாத​புரம், சிவகங்​கை, புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் 8-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தீவிர மழை பொழிவை கொடுத்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் நல்ல மழை பெய்தது. தற்போது நீலகிரி, மதுரை உள்படசில பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் போலவே வரும் வாரத்திலும் மழைக்கு மீண்டும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Heavy rain likely in 6 districts including Thanjavur Sivaganga Ramanathapuram on September 8th

சென்னையில் உள்ள தென் மண்டல வானிலை மையம் வெளி​யிட்ட அறிவிப்பில் கூறுகையில், "வடமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகு​தி, மேற்​கு, வடமேற்​காக நகர்ந்து நேற்று அதி​காலை 5.30 மணி அளவில் காற்​றழுத்த தாழ்வு பகு​தி​யாக வலுகுறைந்​து, வடக்கு சட்​டீஸ்​கர் மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களில் நில​வியது.

இதற்​கிடையே, மேற்கு திசை காற்​றின் வேக மாறு​பாடு காரண​மாக தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று முதல் செப்​.7-ம் தேதி வரை இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். ராம​நாத​புரம், சிவகங்​கை, புதுக்​கோட்​டை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் 8-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்​ளது.

தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று அதி​கபட்ச வெப்​பநிலை 2-3 டிகிரி செல்​சி​யஸ் வரை இயல்​பை​விட அதி​க​மாக இருக்​கக்​கூடும்.

சென்​னை​யில் இன்று வானம் ஓரளவு மேக மூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. வெப்​பநிலை 27 டிகிரி முதல் 35 டிகிரி செல்சி​யஸ் வரை இருக்​கக்​கூடும். தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி வரையி​லான 24 மணி நேரத்​தில் அதி​கபட்​ச​மாக நீல​கிரி மாவட்​டம் பார்​வூட், விண்ட்​வொர்த் எஸ்​டேட், மதுரை மாவட்​டம் தனி​யாமங்​கலத்​தில் அதி​கபட்​ச​மாக 3 செ.மீ. மழை பதி​வானது. மதுரை வி​மான நிலை​யத்​தில் 39 டிகிரி செல்​சி​யஸ் வெப்​பநிலை பதி​வானது" இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+