குடையை ரெடியா வச்சுக்கோங்க.. தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கொளுத்தப் போகும் மழை.. வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே வெயில், மழை என மாறி மாறி கிளைமேட் இருந்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் 2 நாட்கள் மழையும், 2 நாட்கள் வெயிலும் என கிளைமேட் நாளுக்கு நாள் மாறி வருகிறது. நேற்று முன் தினம் இரவு தூத்துக்குடியில் கொட்டி தீர்த்த கனமழையினால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இதேபோன்று அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

8 மாவட்டங்களில் கனமழை
இந்த நிலையில் தான் இன்றும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தின் ஒருசில இடங்களிலும், புதுக்கோட்டையில் ஒருசில பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. இதனால் வெயிலின் உக்கிரம் ஓரளவு அடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையை கூறியுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது புதுவை, காரைக்கால் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு
வரும் 25 ஆம் தேதி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வரும் 27, 28, 29 ஆம் தேதிகள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை 35 - 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications