சென்னை உள்பட 3 மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் இன்று அதிகபட்ச வெப்பநிலை மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வழக்கமாக சென்னை, வேலூர் உள்பட தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் தான் வெயில் வாட்டி வதைத்து வந்தது.

chennai weather rain
சென்னையில் 10 செமீ மழை

சென்னையில் 10 செமீ மழை

ஆனால் இன்று அப்படியே கிளைமேட் மாறி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் மழை பெய்ததால் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். பல இடங்களில் தண்ணீர் சாலைகளில் தேங்கும் அளவுக்கு மழை பெய்திருந்தது. குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் ஏப்ரல் மாதத்தில் 10 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளது என்று தனியார் ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை நகரம் குளிர்ந்தது.

இந்த நிலையில் இன்று சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

3 மாவட்டங்களில் கனமழை

தமிழகத்தில் இன்று ஒருசில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று அதிகபட்ச வெப்பநிலை மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.

தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அடுத்த ஒரு வாரத்திற்கான மழை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அடுத்த 7 நாட்களுக்கு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 16-04-2025 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை 17 ஆம் தேதி முதல் வரும் 22 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் 2 நாட்களுக்கு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (16-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.

சென்னையில் நாளை (17-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

* அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: 16-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
* 17-04-2025 முதல் 20-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.

* இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 16-04-2025 மற்றும் 17-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
* 18-04-2025 முதல் 20-04-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
* மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்: 16-04-2025 முதல் 20-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

பதிவான மழை அளவு (செமீ):

* மேட்டூர் (சேலம்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி) - தலா 5 செமீ,
* மேட்டூர் AWS (சேலம்), அம்மாபேட்டை (ஈரோடு) தலா 4 செமீ,
* போச்சம்பள்ளி ARG (கிருஷ்ணகிரி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), சிவகிரி (தென்காசி), ஒகேனக்கல் (தர்மபுரி), சோத்துப்பாறை (தேனி) தலா 3 செமீ,
* மாரண்டஹள்ளி (தர்மபுரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), பாரூர் (கிருஷ்ணகிரி) தலா 2,

* வாணியம்பாடி (திருப்பத்தூர்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), வேலூர் (வேலூர்), சங்கரன்கோயில் (தென்காசி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), தென்காசி (தென்காசி) தலா 1 செமீ மழை பெய்துள்ளது.

வெப்பநிலை நிலவரம்:

* அதிகபட்ச வெப்பநிலை :- வேலூர்: 38.1° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- தர்மபரி: 21.0° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- தர்மபுரி: 21.0° செல்சியஸ்
* கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.

* தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
* வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-38° செல்சியஸ், தென்தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-36° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 22-29° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+