Heavy Rain: இன்னைக்கு நைட் புல்லா மழை வெளுக்க போகுது.. கோவை டூ குமரி வரை 22 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று திடீரென பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவும் 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. கோவை, நெல்லை, குமரி, தென்காசி என 22 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இன்று திடீரென பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. உதகையில் ஆலங்கட்டி மழை கொட்டியது. இதேபோன்று கோவை, ராமநாதபுரம், நீலகிரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், குமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

22 மாவட்டங்களில் மழை வெளுக்கும்
மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கோவை முதல் குமரி வரை 22 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) தமிழகத்தின் கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருச்சி, நெல்லை, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
குமரி, கரூர், வேலூரில் மழை கொட்டும்
இதேபோன்று அடுத்த 2 மணி நேரத்திற்கு (இரவு 10 மணி வரை) தமிழ்நாட்டின் கரூர், கன்னியாகுமரி, வேலூர் மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று 17-03-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம்,
நாளை 18-03-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடிமின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19-03-2026: டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
23 ஆம் தேதி வரை மழை தான்
20-03-2026: டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இடிமின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 21-03-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
22-03-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 23-03-2026: தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
17-03-2026 மற்றும் 18-03-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. 19-03-2026 முதல் 21-03-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2.3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
சென்னையில் நாளை மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (17-03-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (18-03-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications