பட்டையை கிளப்பப்போகுது கனமழை.. 11 மாவட்டங்களுக்கு அலர்ட்! சென்னையிலும் சரியான சம்பவம் இருக்கு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 17.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

18.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19.10.2023 முதல் 23.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): உப்பாறு அணை (திருப்பூர்), திற்பரப்பு (கன்னியாகுமரி), தம்மம்பட்டி (சேலம்), திருவாடானை (ராமநாதபுரம்), களியல் (கன்னியாகுமரி), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்) தலா 8, தேவகோட்டை (சிவகங்கை), சூலூர் (கோயம்புத்தூர்), கோயம்புத்தூர் விமான நிலையம், கிளானிலை (புதுக்கோட்டை), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி) தலா 7, வட்டானம் (ராமநாதபுரம்), திண்டிவனம் (விழுப்புரம்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), மேட்டூர் (சேலம்), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 6, வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சேலம், பல்லடம் (திருப்பூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), ஆத்தூர் (சேலம்), ராசிபுரம் (நாமக்கல்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), தஞ்சாவூர், மங்களபுரம் (நாமக்கல்), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி) தலா 5, TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), கொடுமுடி (ஈரோடு), பாடலூர் (பெரம்பலூர்), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), காரைக்குடி (சிவகங்கை), ஓமலூர் (சேலம்), சோழவந்தான் (மதுரை), அவினாசி (திருப்பூர்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), திருப்பூர் PWD, தேக்கடி (தேனி), கிளன்மார்கன் (நீலகிரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), புதுச்சத்திரம் (நாமக்கல்), திருமூர்த்தி IB (திருப்பூர்), ஆனைப்பாளையம் (கன்னியாகுமரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), எழுமலை (மதுரை), நாகுடி (புதுக்கோட்டை), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), மதுரை விமானநிலையம் தலா 4, மேல் கூடலூர் (நீலகிரி), கங்கவல்லி (சேலம்), செருமுள்ளி (நீலகிரி), கின்னக்கோரை (நீலகிரி), அரியலூர் PTO (அரியலூர்), மீ மாத்தூர் (கடலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கோடிவேரி (ஈரோடு), கீழச்செருவை (கடலூர்), திருச்செங்கோடு (நாமக்கல்), போதானூர் இரயில் நிலையம் (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), திருவையாறு (தஞ்சாவூர்), வெள்ளக்கோயில் (திருப்பூர்), காரியாப்பட்டி (விருதுநகர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), மடத்துக்குளம் (திருப்பூர்), தேவாலா (நீலகிரி), கெத்தை (நீலகிரி), நாகப்பட்டினம்,, நந்தியாறு (திருச்சிராப்பள்ளி), பெருந்துறை (ஈரோடு), பார்வூட் (நீலகிரி), காரைக்கால், பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), அடையாமடை (கன்னியாகுமரி), சின்கோனா (கோயம்புத்தூர்), தாதியங்கர்பேட்டை (திருச்சிராப்பள்ளி), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), சீர்காழி (மயிலாடுதுறை), சங்கரி துர்க்கம் (சேலம்), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), வேப்பூர் (கடலூர்) தலா 3, அறந்தாங்கி (புதுக்கோட்டை), கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), கோயம்புத்தூர்-தெற்கு, சங்கரன்கோயில் (தென்காசி), DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), செட்டிகுளம் (பெரம்பலூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), விரகனூர் அணை (மதுரை), பாலவிடுதி (கரூர்), பென்னாகரம் (தர்மபுரி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), நாமக்கல் ஆட்சியர் அலுவலகம், சந்தியூர் KVK AWS (சேலம்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சிறுவாணி ஆதிவாரம் (கோயம்புத்தூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), அமராவதி அணை (திருப்பூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), தலைவாசல் (சேலம்), TNAU கோயம்புத்தூர், பாலமோர் (கன்னியாகுமரி), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை (தர்மபுரி), குப்பணம்பட்டி (மதுரை), கீரனூர் (புதுக்கோட்டை), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), உசிலம்பட்டி (மதுரை), தாராபுரம் (திருப்பூர்), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்), ஆண்டிபட்டி (மதுரை), கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), லக்கூர் (கடலூர்), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), சிற்றாறு-I (கன்னியாகுமரி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), அண்ணாமலை நகர் (கடலூர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), தானியமங்கலம் (மதுரை), அம்மாபேட்டை (ஈரோடு), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), சிதம்பரம் AWS (கடலூர்), எடப்பாடி (சேலம்), ஏற்காடு (சேலம்), திண்டுக்கல்,, டேனிஷ்பேட்டை (சேலம்), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 2, சென்னை ஆட்சியர் அலுவலகம்), பாப்பாரப்பட்டி KVK AWS (தர்மபுரி), செஞ்சி (விழுப்புரம்), சுருளகோடு (கன்னியாகுமரி), சிங்கம்புணரி (சிவகங்கை), அரண்மனைப்புதூர் (தேனி), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), திருப்பத்தூர் (சிவகங்கை), திருப்புவனம் (சிவகங்கை), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), காட்டுப்பாக்கம் (காஞ்சிபுரம்), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), துவாக்குடி (திருச்சிராப்பள்ளி), கேத்தி (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு), திருச்சிராப்பள்ளி விமானநிலையம், திருக்குவளை (நாகப்பட்டினம்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), திருமயம் (புதுக்கோட்டை), வீரகனூர் (சேலம்), தொழுதூர் (கடலூர்), நாமக்கல், புத்தன் அணை (கன்னியாகுமரி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), RSCL வல்லம் (விழுப்புரம்), நம்பியூர் (ஈரோடு), கடவூர் (கரூர்), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), பரமத்திவேலூர் (நாமக்கல்), ஆழியார் (கோயம்புத்தூர்), வத்திராயிருப்பு (விருதுநகர்), முசிறி (திருச்சிராப்பள்ளி), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), சாத்தியார் (மதுரை), ஆனைமடுவு அணை (சேலம்), கோவிலங்குளம் (விருதுநகர்), திருமங்கலம் (மதுரை), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), ஊத்துக்குளி (திருப்பூர்), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), கோடியக்கரை (மயிலாடுதுறை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), வந்தவாசி (திருவண்ணாமலை), பழனி (திண்டுக்கல்), மொடக்குறிச்சி (ஈரோடு), ஒகேனக்கல் (தர்மபுரி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), விருதாச்சலம் (கடலூர்), அவலாஞ்சி (நீலகிரி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), குண்டடம் (திருப்பூர்), தர்மபுரி (தர்மபுரி), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), கொடவாசல் (திருவாரூர்), பேரையூர் (மதுரை), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), வல்லம் (தஞ்சாவூர்), அரவக்குறிச்சி (கரூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஆட்சியர் அலுவலகம் திருப்பூர், குளித்தலை (கரூர்), தழுதலை (பெரம்பலூர்), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), திருச்சுழி (விருதுநகர்), ஆயின்குடி (புதுக்கோட்டை), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), DSCL தியாகதுர்க்கம் (கள்ளக்குறிச்சி), புலிவலம் (திருச்சிராப்பள்ளி), திருப்பூர் தெற்கு, பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), BASL முகையூர் (விழுப்புரம்), பாபநாசம் (திருநெல்வேலி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), பரமக்குடி (ராமநாதபுரம்), அரிமளம் (புதுக்கோட்டை) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் 17.10.2023: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: 17.10.2023: கேரளா கடலோரப்பகுதிகள், லட்சதீவு-மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
18.10.2023:தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19.10.2023: தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
20.10.2023 மற்றும் 21.10.2023: தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications