வட, தென் தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழை கொளுத்தும்.. சென்னையிலும் குளுகுளு கிளைமேட் தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நேற்று பரவலாக பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. நெல்லை, தென்காசி, குமரி, கோவை, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையிலும் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தீவிரமாக இருந்தது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

Rain Chennai

நேற்று பதிவான மழை அளவு

* சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 16 செமீ.
* வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 15 செமீ.
* சின்கோனா (கோயம்புத்தூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 12 செமீ.
* வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), அவலாஞ்சி (நீலகிரி) தலா 10 செமீ.
* நாலுமுக்கு (இருநெல்வேலி) 7 செமீ.

* ஊத்து (திருநெல்வேலி), மேல் பவானி (நீலகிரி), தேவாலா (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 5 செமீ.
* மாஞ்சோலை (திருநெல்வேலி), பெரியாறு (தேனி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி) தலா 4 செமீ.
* கிளன்மார்கன் (நீலகிரி), ஆழியார் (கோயம்புத்தூர்), குண்டாறு அணை (தென்காசி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), அடவிநயினார் அணை (தென்காசி), பாலமோர் (கன்னியாகுமரி), செருமுள்ளி (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), எமரால்டு (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 3 செமீ மழை பெய்துள்ளது.

அடுத்த ஒரு வார மழை அப்டேட்

நாளை 18 ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குறிப்பாக இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

22 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்

18-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19-08-2025 முதல் 21-08-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று மழை பெய்யுமா?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 - 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகளை பொறுத்தவரை இன்று 17-08-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணி 41 முதல் கிமீ வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கடும்.

18-08-2025 முதல் 20-08-2025 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்கண்ட தகவலை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+