Heavy rain: அடுத்த 3 மணி நேரம்.. பிச்சு உதறப்போகுது மழை.. சென்னை டூ குமரி வரை 21 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை முதல் குமரி வரை 21 மாவட்டங்களில் மழை விட்டு விளாசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், கோவை, நெல்லை, குமரி என 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் கனமழை கொட்டி வரும் நிலையில், கோவை, நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Heavy rain to lash the the next 3 hours Chennai to Kanyakumari a warning has been issued for 21 districts

சென்னை உள்பட 21 மாவட்டங்கள்

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கடந்த இரு நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்றும் வானம் மேகமூட்டத்துட்டன் காணப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை விட்டு விளாசும் என வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

"தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, பெரம்பலூர், கோவை, நீலகிரி, தேனி, குமரி, நெல்லை ஆகிய 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பதிவான மழை அளவு (செமீ):

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாலுமுக்கு (திருநெல்வேலி) 29, ஊத்து (திருநெல்வேலி) 27, காக்காச்சி (திருநெல்வேலி) 19. காளிகேசம்(கன்னியாகுமரி) 14, சிற்றாறு-1 (கன்னியாகுமரி), கீரிப்பாறை (கன்னியாகுமரி) 13, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) 12, நெய்யூர் AWS (கன்னியாகுமரி) 12, பெரியாறு (தேனி) 12, மாஞ்சோலை (திருநெல்வேலி) 12, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 11, புத்தன் அணை (கன்னியாகுமரி) 11, உபாசி TRF AWS (கோயம்புத்தூர்) 10, சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி) 9, தேக்கடி (தேனி) 9, குழித்துறை (கன்னியாகுமரி) 9, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 9, அடையாமடை (கன்னியாகுமரி) 9, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி) 8, அணைகெடங்கு (கன்னியாகுமரி) 8, சுருளக்கோடு (கன்னியாகுமரி) 8, வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 8 செமீ மழை பெய்துள்ளது.

இன்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதனால் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

திருப்பூர் மாவட்டத்தின் மலை பகுதிகள மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ராணிபேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழை வெளுக்கும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+