மழையே நிற்காது போல! அடுத்த 2 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழை விட்டு விளாசும்! பெரிய சம்பவம்தான்
சென்னை: தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் கணிசமாகக் குறைவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மட்டும் 29 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தப் பருவமழை சீசனில் ஓரளவுக்கு நல்ல மழையே பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகக் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் இந்த மழை பெய்வதால் வெப்பம் குறைகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

29 மாவட்டங்கள்
இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது இரவு 7 மணி வரை திருவள்ளூர், தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசியில் மழை பெய்யும். மேலும், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூரில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூரில் மழை கொட்டும். திருவள்ளூர், திருச்சி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலையில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி வரை இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் இங்கு டிராபிக் பாதிப்பு ஏற்படலாம் என்றும் சாலைகளிலும் நீர் தேங்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையும் லிஸ்டில் இருக்கு
அதேபோல சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள், அதாவது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இப்படித் தமிழகத்தில் கிட்டத்தட்ட எல்லா மாவட்டங்களிலும் இரவு 7 மணி வரை கனமழை கொட்டும் என்பதால் பொதுமக்கள் அதற்கேற்பத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
வானிலை மையம்
முன்னதாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
கனமழை தொடரும்
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications