சென்னை, திருவண்ணாமலை உட்பட 33 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார்
சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவண்ணாமலை உட்பட 33 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுப்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தமிழ்நாடு வழியாக அரபிக்கடலை நோக்கி செல்லும் என்றும், போகும் பாதையில் மழையை கொடுத்துக்கொண்டே செல்லும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில்

அயனாவரம் மண்டலம் 06 கொளத்தூர் - 89.7 மி.மீ
அம்பத்தூர் மண்டலம் 07 அயப்பாக்கம் -86.4 மி.மீ
அம்பத்தூர் மண்டலம் 07 அம்பத்தூர் - 82.8 மி.மீ
மாதவரம் மண்டலம் 03 மாதவரம் - 80.4 மி.மீ
அயனாவரம் மண்டலம் 06 பெரம்பூர் - 77.4 மி.மீ
தண்டையார்பேட்டை மண்டலம் 04 தண்டையார்பேட்டை 74.4 மி.மீ
திருவொற்றியூர் மண்டலம் 02 மணலி நியூ டவுன் - 73.8 மி.மீ
தண்டையார்பேட்டை மண்டலம் 05 பேசின் பாலம் -73.2 மி.மீ
மாதவரம் மண்டலம் 03 புழல் 72.6 மி.மீ
அமிஞ்சிக்கரை மண்டலம் 08 அமிஞ்சிக்கரை - 72.3 மி.மீ
திருவொற்றியூர் மண்டலம் 01 திருவொற்றியூர் -71.7 மி.மீ
அமிஞ்சிக்கரை மண்டலம் 08 அண்ணா நகர் மேற்கு - 70.2 மி.மீ
திருவொற்றியூர் மண்டலம் 01 கத்திவாக்கம் -66.6 மி.மீ
புரசைவாக்கம் மண்டலம் 05 சென்னை சென்ட்ரல் -64.5 மி.மீ
திருவொற்றியூர் மண்டலம் 02 மணலி -58.5 மி.மீ
மதுரவாயல் மண்டலம் 11 மதுரவாயல் -57.9 மி.மீ
சோழிங்கநல்லூர் மண்டலம் 14 மடிப்பாக்கம் -54.9 மி.மீ
எழும்பூர் 54.9 எழும்பூர் மண்டலம் 11 -வளசரவாக்கம் 53.7 மி.மீ
கிண்டி மண்டலம் 12 மீனம்பாக்கம் - 53.6 மி.மீ
என மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 10 மணி வரை 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசிக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications