சுத்துப்போட்ட கருமேகம்.. சென்னையில் வெளுக்கும் கனமழை! புறநகர் பகுதிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னை: சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் வேறு எங்கெல்லாம் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் லிஸ்டை வெளியிட்டுள்ளது.
தென்னிந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது மே மாதம் இறுதியிலும், ஜூன் மாதம் 1ம் தேதியும் தொடங்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்ததைவிட ஒரு வாரம் தாமதமாகவே தொடங்கியது. இந்த மழையால் முதலில் பயன்பெறும் மாநிலம் கேரளம்தான். அதன் பின்னர்தான் தமிழ்நாடு, கர்நாடா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும்.

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்ததால் பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 90 சதவிகிதமும், அதற்கு முன்னர் ஜூன் மாதத்திலும் பருவமழை 65 சதவிகிதம் என மொத்தமாக இந்த முறை பருவமழை 45 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இதேபோல கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவிலும் பருவமழை குறைந்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான நீர் வரத்து குறைந்தது.
இருப்பினும் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியிருந்தது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் 239.9 மி.மீ (76% கூடுதல் மழை), செங்கல்பட்டு மாவட்டத்தில் 107.3 மி.மீ (16% குறைவு), காஞ்சிபுரத்தில் 158.5 மி.மீ (12% கூடுதல்) என தமிழ்நாடு முழுவதும் பரவலாக 95 சதவிகிதம் மழை கூடுதலாக பெய்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் மிதமான மழையும், ஊத்துக்கோட்டை, பொன்னேரி பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல பூவிருந்தவல்லி, மாதவரம் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தவிர திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
மற்ற மாவட்டங்களை பொறுத்த அளவில் கரூர், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்திலும் சில இடங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது. தற்போது சென்னையில் முகப்பேர், அரும்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், கோயம்பேடு, அமைந்தகரை, வில்லிவாக்கம், அயனாவரம், மாதாவரம், பாடி, ஓட்டேரி, ரெட்டேரி பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications