இடி + மின்னல்+ சூறைக்காற்று.. சென்னையில் இரவு முதல் கொட்டித்தீர்த்த கனமழை! 35 விமான சேவை பாதிப்பு
சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காலையிலேயே 35 விமான சேவைகள் தாமதமாகி உள்ளன.
தென் மேற்கு பருவமழையை முன்னிட்டு வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

அதாவது காலை, மதிய வேளைகளில் சென்னையில் வெயில் அடிக்கிறது. அதன்பிறகு மாலையில் வானிலை மொத்தமாக மாறி மழை பெய்கிறது.
நேற்றைய தினம் சென்னையில் பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இடி - மின்னலுடன் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. நேற்று இரவு சுமார் 7 மணிக்கு பிறகு சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்தது. முதலில் மிதமான மழை பெய்த நிலையில் நேரம் ஆக ஆக கனமழையாக மாறியது. இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
சென்னை எழும்பூர், காசிமேடு, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், ராயபுரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை உள்பட அதனை சுற்றிய பல இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம் அதனை சுற்றிய பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழை அதிகாலை வரை தொடர்ந்தது.
இந்நிலையில் மழையின் காரணமாக சென்னையில் இன்று காலை முதல் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அதன்படி சென்னையில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள், சென்னையில் இருந்து வெளியூர், வெளிமாநிலங்களுக்கு புறப்படும் 18 விமானங்கள் என மொத்தம் 35 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
அதன்படி டெல்லி, கொல்கத்தா, மதுரை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்களால் உடனடியாக தரையிறங்க முடியவில்லை. இதனால் இந்த விமானங்கள் வானில் வட்டமடித்தன. அதன்பிறகு அந்த விமானங்கள் தாமதமாக அடுத்தடுத்து தரையிறங்கின.
அதேபோல் சென்னை விமான நிலையத்தில் அபுதாபி, துபாய், கோலாலம்பூர், சிங்கப்பூர், டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட வேண்டிய 18 விமானங்கள் 2 மணிநேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் விமான பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை இன்று அதிகபட்ச வெப்பநிலை
36-37 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications