Heavy Rain: சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேற்கு வங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை வெளுக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்தது. வானிலை ஆய்வு மையமும் ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் தான் நேற்று முன் தினம் திடீரென தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

Heavy Rain with Thunder and Lightning to Lash Chennai Today and Tomorrow Weather Center

மழை வெளுத்து வாங்கும்

சென்னையில் காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், 11 மணிக்கு மேல் வானம் முழுவதும் இருள் சூழ்ந்து மழை கொட்டியது. கொடுங்கையூர், பெரம்பூர், மாதவரம், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் மழை வெளுத்து வாங்கியது.

நேற்றும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை கொட்டியது. இந்த நிலையில் வரும் 13 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

காற்றழுத்த தாழ்வு பாதை

சுமார் 0.9 கிமீ உயரத்தில், மேற்கு வங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை ஓடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், தெலங்கானா, ராயலசீமா, தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இன்று 07-04-2026 மற்றும் 08-04-2026: தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடக்கு உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

09-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

13 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்

10-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11-04-2026 மற்றும் 12-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

13-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

07-04-2026 மற்றும் 08-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 09-04-2026 முதல் 11-04-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

சென்னையில் இன்றும் நாளையும் மழை

சென்னையில் இன்று (07-04-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (08-04-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழை அளவு (செமீ)

* மண்டபம் (ராமநாதபுரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்). ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை). YMCA நந்தனம் ARG (சென்னை), Z 11 வளசரவாக்கம் (W 152) (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) தலா 5,

* காரைக்குடி (சிவகங்கை), Z 11 வளசரவாக்கம் (W 148) (சென்னை), தேவகோட்டை (சிவகங்கை), Z 11 வளசரவாக்கம் (W 149) (சென்னை), மேலாலத்தூர் (வேலூர்), Z 13 அடையார் (W 175) (சென்னை), அறந்தாங்கி (புதுக்கோட்டை). இரணியல் (கன்னியாகுமரி) தலா 4,

* Z 11 நெற்குன்றம் (W 144) (சென்னை), ஆவடி (திருவள்ளூர்), திருப்பத்தூர் (சிவகங்கை). ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), அணைகெடங்கு (கன்னியாகுமரி), Z 10 வடபழனி (W 134) (சென்னை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), Z 07 அயப்பாக்கம் (W 3S) (சென்னை), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), நெய்யூர் AWS (கன்னியாகுமரி), பரமக்குடி (ராமநாதபுரம்) தலா 3,

* இளையாங்குடி (சிவகங்கை), Z 13 ராஜா அண்ணாமலை புரம் (W 173) (சென்னை). திருவாடானை (ராமநாதபுரம்), Z 10 சாலிகிராமம் (W 129) (சென்னை), ஜெயா பொறியியல் கல்லூரி AWS (திருவள்ளூர்), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி). பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), தரமணி ARG (சென்னை), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), ஊத்து (திருநெல்வேலி), செம்பரம்பாக்கம்-REV (திருவள்ளூர்), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), சிட்டம்பட்டி (மதுரை, மணல்மேடு (மயிலாடுதுறை), கொரட்டூர் (திருவள்ளூர்).2 11 மதுரவாயல் (W 146) (சென்னை) தலா 2 செமீ மழை பெய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+