சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை.. அடிச்ச வெயிலுக்கு இப்போதான் ஜில்லுன்னு இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இடி மின்னலுடன் கனமழை தொடங்கியிருக்கிறது.

சென்னையின் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாம்பலம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், பாடி, அயனாவரம், கொளத்தூர், புரசைவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருக்கிறது. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

rain weather tamil nadu

முன்னதாக இன்று மதியம் வெளியாகி இருந்த வானிலை அறிவிப்பில் தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் சில தகவல்களை வழங்கி இருந்தது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக இருந்தது என்றும் மாநிலத்தின் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் அதிகபட்சமாக 8 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்து இருக்கிறது.

அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் ஒன்று முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 38.8 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 21 டிகிரி செல்சியஸும் வெப்பம் பதிவாகி இருந்தது.

கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி இன்றுவரை தமிழகத்தில் சராசரியாக 274.9 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இந்த காலங்களில் பதிவாக வேண்டிய இயல்பான மழையை விட தற்போது பதிவாகியிருக்கும் மழை ஒரு சதவீதம் அளவுக்கு குறைவாகும். மாவட்ட வாரியாக பார்த்தால் சென்னை, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நீலகிரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழை இயல்பை விட கூடுதலாக பெய்திருக்கிறது. இந்த மாவட்டங்களில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் மட்டும் இயல்பை விட 256 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி இருக்கிறது.

மற்றபடி செங்கல்பட்டு, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், திருப்பூர், தூத்துக்குடி, திருச்சி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மழை இயல்பை விட குறைவாக பெய்து இருக்கிறது இந்த மாவட்டங்களில் மிக மிக குறைவாக மழை பதிவான மாவட்டமாக திருப்பூர் இருக்கிறது. அதாவது இந்த காலங்களில் பெய்ய வேண்டிய இயல்பான மழையை விட 53 சதவீதம் அளவுக்கு திருப்பூரில் மழை குறைவாக பெய்து இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+