தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை.. லிஸ்டுல உங்க மாவட்டம் இருக்கானு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக பதிவாகி வந்த நிலையில், இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "27ம் தேதி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 36.6° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

weather tamil nadu rain

இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக

தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி

ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர்
புதுக்கோட்டை
ராமநாதபுரம்
சிவகங்கை
விருதுநகர்
தேனி
மதுரை
திண்டுக்கல்
தென்காசி
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி

என 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மார்ச் 1ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மார்ச் 2ம் தேதி, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மார்ச் 3ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 4ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வெப்பநிலையை பொறுத்தவரை, இன்று தொடங்கி மார்ச் 2ம் தேதி வரை, 4 தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும்.

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (27-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+