கொட்டிய கனமழை.. இன்னும் 6 நாட்களுக்கு ஜில் கிளைமேட்.. சென்னையில் 15 விமான சேவைகள் பாதிப்பு
சென்னை: பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில் 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அதில் 5 விமானங்கள் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் சேப்பாக்கம், எழும்பூர், கிண்டி, ஆலந்தூர், மதுரவாயல், வானகரம், திருவேற்காடு பகுதியில் பரவலாக மழை பெய்தது, அத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 16ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேற்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 16ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் சேப்பாக்கம், எழும்பூர், கிண்டி, ஆலந்தூர், மதுரவாயல், வானகரம், திருவேற்காடு பகுதியில் பரவலாக மழை பெய்தது, அத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 16ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் திடீரென பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில் 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அதில் 5 விமானங்கள் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. திடீர் மழையால் பல இடங்களில் சாலை ஓரங்களில் வெள்ள நீர் தேங்கியது. மாலை நேரத்தில் பெய்த மழையால் பள்ளி, கல்லூரிக்கு சென்றவர்களும், பணிகளுக்கு சென்றவர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications