நீலகிரியில் நீடிக்கும் கனமழை.. உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

உதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் கல்லார் - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே பல இடங்களில் பாறைகள் விழுந்து சேதமான காரணத்தால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அருவிகளில் தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

Heavy rains continues in Nilgiris Landslides Mountain train service cancelled today

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து குற்றால அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த தடை உத்தரவை அறிந்து சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலை ரயில் சேவை கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி காலை 7:10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதியம் 2 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர்.

இந்த மலை ரயில் பயணம் மூலம் நீலகிரி மலையின் இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் கல்லார் - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே பல இடங்களில் பாறைகள் விழுந்து சேதமான காரணத்தால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+