கன மழையால் சென்னையில் பாதிப்பில்லை..நலப்பணிகளை கவனிக்க முதல்வர் உத்தரவு...மா.சுப்ரமணியன்
சென்னை: 73 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் கனமழை பெய்த காரணத்தினால்தான் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வடிகால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மழைநீர் உடனடியாக வடிந்தது என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். கலைஞர் கோட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்றும் சென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிக்க அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுகிழமை மிகப்பெரிய மழை பெய்து உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மழைநீர் வடிகால் பணிகளை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 200 கோடி ரூபாய் மதிப்பீல் 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிகப்பெரிய பணிகள் மாநகராட்சியின் வரலாற்றில் கட்டப்படுகிறது.

பெரியஅளவில் மழை பாதிப்புகள் வந்த போதும் உடனடியாக தண்ணீர் வடிந்தது. போக்குவரத்து சீரானதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உடைந்து விழுந்த மரங்களும் அகற்றப்பட்டன. குடியிருப்புகள், குடிசைப்பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் இன்று ஒரே நாளில் 90 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
கனமழை பாதிப்பு இருப்பதால் கலைஞர் கோட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்க திருவாரூர் சென்ற நாங்கள் உடனே சென்னை திரும்பி விட்டோம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை பாதிப்பின் காரணமாக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் இருந்து மழை பாதிப்புகளை கவனிக்க வேண்டும் என்று கூறியதால் சென்னைக்கு உடனே வந்து விட்டோம். வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, சென்னையைச் சேர்ந்த அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரை சென்னையிலேயே இருந்து பணிகளை கண்காணிக்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
இன்று கலைஞர் கோட்டம் திறப்பு விழா திருவாரூரில் நடைபெறுகிறது. கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications