சென்னை டூ குமரி வரை.. அடுத்த 3 மணி நேரத்துக்கு.. 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை அலர்ட்
சென்னை: இன்று காலையில் இருந்தே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதிகாலையிலேயே மழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை முதல் குமரி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இனி ஒரு வாரத்துக்கு இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இனி வெயில் இருக்காது என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களிலே அதிக மழை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

சென்னை டூ குமரி வரை
தமிழகத்தில் கோடை மழை தீவிரம் அடையும் என்றும், அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இந்த மழை பெய்யும் என்றும், அதே நேரத்தில் பகல் நேரங்களில் ஒரு சில இடங்களில் வெயில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழை பெய்தது.
இன்று அதிகாலையிலேயே தமிழத்தில் நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. காலையில் இருந்தே பெரிதாக வெயில் இல்லாமல், வானம் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது. இந்நிலையில் மதியம் ஒரு மணி வரைக்கும் இதே நிலைதான் நீடிக்கும் என்றும், சென்னை டூ குமரி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
9 மாவட்டங்கள் என்னென்ன?
வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று இன்று மதியம் 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்
முன்னதாக இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது. இந்த அறிவிப்பில், "தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
* இதனால் இன்று (மே 18) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை 8 மாவட்டங்கள்
* நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் திருச்சி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* வரும் 20 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23 ஆம் தேதி வரை
* 21 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 22ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 23 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications