சென்னையில் கனமழை.. திடீரென கொட்டித்தீர்த்ததால் வாகன ஓட்டிகள் தவிப்பு
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இன்று இரவு 7.30 மணியளவில் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூட தமிழகத்தில் ஓரிரு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறியிருந்தது.

இதே போல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், வருகிற 10 முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இரவு 7.30 மணியளவில் சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.
குறிப்பாக சென்னை பாரிமுனை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, ஆழ்வார் பேட்டை, அடையாறு, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர், அம்பத்தூர், ஆவடி, மயிலாப்பூர், மெரினா, சேப்பாக்கம், தியாகராய நகர், பட்டாபிராம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. திடீரென பெய்த மழையால் சென்னை நகரம் குளிர்ந்தது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications