எமெர்ஜென்சியில் சென்னை.. ஆம்புலன்ஸ்களுக்கு தனி சாலைகள் அறிவிப்பு! மக்களே வழிவிட்டு உதவி செய்யுங்க
சென்னை: மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து இருக்கும் நிலையில் ஆம்புலன்ஸுகள் செல்வதற்கு என தனி வழிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்' எனப் பெயரிடப்பட்டு இருக்கிறது. தலைநகர் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 130 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு உள்ள இந்த புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெரு மழை விடிய விடிய கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து இருக்கின்றன. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெரு வெள்ள காலத்தில் கொட்டிய கனமழையை காட்டிலும் அதி கனமழையை இன்று சென்னை எதிர்கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இன்று அதிகாலை வரை 340 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதற்கு முன் சென்னையில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது 340 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பெய்தது.
சென்னையில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அதேபோன்று நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.
இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் சென்னையின் முக்கிய மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் செல்லும் வகையில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
1. சென்னை GRH இல் இருந்து ராஜீவ் காந்தி மருத்துவமனை செல்ல:
மேற்கு காட் சாலை - டவர் கிளாக் - ஒயிட்ஸ் சாலை - அண்ணாசாலை - ஸ்பென்சர் பிளாசா சந்திப்பு - வெலிங்டன் சந்திப்பு - அண்ணா சிலை - பெரியார் சிலை - பல்லவன் முனை - சென்ட்ரல் ரயில் நிலையம் - ஈவிரா பெரியார் சாலை - ஜிஆர்எச்.
2. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து கேஎம்சி:
சென்ட்ரல் ரயில் நிலையம் - பல்லவன் முனை - அண்ணா சாலை - பெரியார் சாலை - ஏஎன் தெரு - சிந்தாதரிப்பேட்டை - எழும்பூர் ரயில் நிலையம் - உடுப்பி சந்திப்பு - எழும்பூர் ஹை ரோடு - காசா மேஜர் சாலை - ஸ்பார்டாங் சாலை - சேத்துபட்டு சந்திப்பு - குருசாமி பாலம் - ஈவிஆர் சாலை - கேஎம்சி
3. ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வரை:
சென்ட்ரல் ரயில் நிலையம் - பல்லவன் முனை - அண்ணாசாலை - பெரியார் சிலை












Click it and Unblock the Notifications