விடிய விடிய வெளுத்து வாங்கிருச்சே.. தண்ணீர் இல்லாத காட்டில் தெறிக்கவிட்ட மழை! டாப் லிஸ்டில் ராம்நாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து இருக்கிறது. எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை பெய்தது என்று பார்ப்போம்.

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் நேற்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது.

Heavy rains in southern districts Lets see how much rain fell in which areas

அதேபோல், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படியே நேற்று மழையே எட்டிப்பார்க்காத ராமநாதபுரம் உட்பட பல தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரை எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை பெய்தது என்ற விபரத்தை மில்லி மீட்டர் அளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 67 மிமீ மழை பெய்து உள்ளது.

தொண்டி (ராமநாதபுரம்) - 61.6,
நாகப்பட்டினம் - 50.6
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) - 49.6
கன்னியாகுமரி - 39.6
காரைக்கால் - 38.6
பாம்பன் (ராமநாதபுரம்) - 21.6
தஞ்சாவூர் - 21.0
திருச்சிராப்பள்ளி - 8.6
பரங்கிப்பேட்டை (கடலூர்) - 8.0
பாளையம்கோட்டை (திருநெல்வேலி) - 5.0
அரியலூர் - 3.0
கடலூர் - 2.0
திருத்தணி (திருவள்ளூர்) - 1.0
கோயம்புத்தூர் - 0.6
மதுரை ஏபி - 0.2

தானியங்கி வானிலை நிலையம்:
அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) - 48.5
திருப்பதிசரம் (கன்னியாகுமரி) - 26.5
திருச்செந்தூர் (தூத்துக்குடி) - 21.0
கோவில்பட்டி (தூத்துக்குடி) - 5.0
விருதுநகர் - 2.0
விஐடி சென்னை (செங்கல்பட்டு) - 0.5
எண்ணூர் துறைமுகம் (சென்னை) - 0.5
சிதம்பரம் (கடலூர்) - 0.2

விவசாய வானிலை பிரிவு:
ராமநாடு (ராமநாதபுரம்) - 67.0
வம்பன் (புதுக்கோட்டை) - 25.0
அருப்புக்கோட்டை (விருதுநகர்) - 3.5
சிருகாமணி (திருச்சிராப்பள்ளி) - 2.0
விருஞ்சிபுரம் (வேலூர்) - 1.0
விருத்தாசலம் (கடலூர்) - 1.0
கட்டப்பாக்கம் (காஞ்சிபுரம்) - 0.5
புதுச்சேரி - 0.5

தானியங்கி மழை அளவீடு நிலையங்கள்:
சத்தான்குளம் (தூத்துக்குடி) - 15.5
கமுதி (ராமநாதபுரம்) - 7.0
ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) - 4.0
மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) - 0.5
புழல் (திருவள்ளூர்) - 0.5
இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) - 0.5

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+