மேற்கு மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. நீலகிரிக்கு போகாதீங்க.. வார்னிங்
சென்னை: தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை சூறையாடிய மழையானது தற்போது தென் மாவட்டங்களையும் மேற்கு மாவட்டங்களையும் குறி வைத்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியில் கனமழை கொட்டியது. கோவை, திருப்பூரிலும் கனமழை பெய்துள்ளது.

இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரபி கடலின் தென்கிழக்கு பகுதி அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகள் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் அடுத்த சில மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும் அடுத்த 4 நாட்களில் கேரளா, மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை வெதர் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நீலகிரி மாவட்டங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications