இதே வேலையாப் போச்சு..கடலில் நீரை உறிஞ்சி கரையில் கொட்டும் மேகங்கள்! காணக் கிடைக்காத அற்புதக் காட்சி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் தனித் தீவாக கிராமம் மாறி வரும் சூழலில், பாத்திரங்கள் அனைத்தையும் அள்ளிக் கொண்டு பொதுமக்கள் ஊரை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி கடல் பகுதியில் மேகங்கள் கடல்நீரை உறிஞ்சும் அற்புதக் காட்சி வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உள்பட தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மழை நீரின் அளவும் அதிக அளவு தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் சுமார் 70 ஆயிரம் கன அடி நீர் வரை வெளியேற்றப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றின் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தடுப்பணையாக விளங்கும் மருதூர் அணைக்கட்டில் இருந்து மட்டும் சுமார் 74 ஆயிரம் கன அடி நீர் தற்போது வரை வந்து கொண்டிருக்கிறது.
இந்த தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் வங்கக்கடலில் கடைசியாக கடக்கும் இடம் தான் திருச்செந்தூர் அருகில் உள்ள புன்னக்காயல். இந்த புன்னக்காயல் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீர் முழுவதும் இந்த புன்னக்காயல் வழியாக கடலில் கலந்து வருகிறது. தாமிரபரணி தண்ணீர் அதிகமாக வருவதால் புன்னக்காயல் ஊருக்குள் இந்த மழை வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதனால் வீடுகளுக்குள் இருந்த பொதுமக்கள் தங்களது உடைமைகளையும், பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்த தண்ணீர் கலக்கும் இடத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் தற்போது தாமிரபரணி ஆற்றில் வந்து கொண்டிருக்கும் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. இதனால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை இந்த மழை நீர் சூழ்ந்து காணப்படுவதால் அந்த பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

வெள்ளம் அதிக அளவு வந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் புன்னக்காயல் பகுதி தனித்தீவாக மாறி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியை ஒட்டிய கடல் பகுதியில் திடீரென கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு ஏற்பட்டது. இந்த நிகழ்வு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த நிலையில் அங்கிருந்த மீனவர்கள் இந்த நிகழ்வை பல்வேறு பகுதிகளில் இருந்து படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர்.
WaterSpout spotted in Thoothukudi#TutyRains @praddy06 @ChennaiRains @TenkasiWeather @MasRainman @ramanathan4548 @RainStorm_TN #Invest90b pic.twitter.com/ZbHnNThpuG
— Pearlcity Weather (@TutyRains) December 14, 2024
கனமழை எச்சரிக்கை காரணமாக ஆள் கடலுக்குச் செல்லாமல் கரையோரமாக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக இறங்கியது. சற்று நேரத்தில் கடல் நீரில் சூறாவளி புயல் போல கீழிருந்து மேலாக மேகங்களுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. நீர் தாரை என அழைக்கப்படும் இந்த நிகழ்வுக்கு டோர்னாடோ என்று பெயர். கடல் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும் கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால் கடலில் நீர் தாரை எனப்படும் இந்த அதிசய நிகழ்வுகள் உருவாகும். பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இது போன்ற நிகழ்வுகள் சாதாரணம்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.












Click it and Unblock the Notifications