சென்னைக்கு மேலே "ராட்சசன்" போல.. ஆட்டம் ஆடிய மிக்ஜாம் புயல் மேகம்! அலற வைத்த 3டி வீடியோ! இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கி உள்ள நிலையில், புயல் கொண்டு வந்த மழை மேகங்களின் 3 டி வீடியோவை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.

சென்னைக்கு அருகே மிக்ஜாம் புயல் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது புயல் மெதுவாக நகரும் நிலையில்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

High Resolution 3D Visualization of Rain bands of Cyclone Michaung above Chennai

புயல் எங்கே உள்ளது: வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் 'மிக்ஜாம்' புயல் நேற்று 23.30 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12- 2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் 'மிக்ஜாம்' புயல் உருவாகியுள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

3 டி வீடியோ: சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கி உள்ள நிலையில், புயல் கொண்டு வந்த மழை மேகங்களின் 3 டி வீடியோவை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது.

சென்னையின் எஸ் பேண்ட் டாப்ளர் வெதர் ரேடார் மூலம் இந்த 3டி வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. ஐஎம்டியில் இருந்து கவனிக்கப்பட்ட மிக்ஜாம் சூறாவளியின் மழை மேகங்கள் வட தமிழ்நாடு கடற்கரையை நெருங்கி வருவதை உயர் தெளிவுத்திறன் கொண்ட 3D காட்சிப்படுத்தல் மூலம் படம் பிடித்து வெளியிட்டு உள்ளனர்.

சென்னை மட்டுமின்றி திருவள்ளூரில் கனமழை விடாமல் பெய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு:

ஆவடி - 28 செ.மீ.
சோழவரம் - 20 செ.மீ
பொன்னேரி -19 செ.மீ
செங்குன்றம் - 17 செ.மீ
தாமரைப்பக்கம் - 17 செ.மீ
கும்மிடிப்பூண்டி - 15 செ.மீ
ஊத்துக்கோட்டை - 15 செ.மீ
திருவள்ளூர் - 15 செ.மீ
பூந்தமல்லி - 14 செ.மீ
ஜமீன் கொரட்டூர் - 12 செ.மீ
திருத்தணி - 12 செ.மீ
பூண்டி - 12 செ.மீ
திருவாலங்காடு - 10 செ.மீ
பள்ளிப்பட்டு - 6 செ.மீ
ஆர்கே பேட்டை - 4 செ.மீ

விடாமல் பெய்த மழை: சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள், அடையாறு ஆறு, ஏரிகள் அனைத்தையும் மேயர் ப்ரியா பார்வையிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+