நவ.20-ல் அதி தீவிர புயலாக கரையை கடக்கும் அக்வான்! ஆந்திராவின் நெல்லூர் - டுனி பகுதிதான் ஹாட்ஸ்பாட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் இன்று மாலை உருவாகவுள்ள அக்வான் புயல், நவம்பர் 20ஆம் தேதி மிக தீவிர புயலாகவே ஆந்திராவின் நெல்லூர்- டுனி (காக்கிநாடா மாவட்டம்) இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு, அதையொட்டி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.

weather rain cyclone akvan

எங்கே இருக்கிறது அக்வான்?

இது இலங்கை திரிகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 630 கி.மீ. தொலைவிலும், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் போர்ட் பிளேருக்கு மேற்கே 690 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே 700 கி.மீ தொலைவிலும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு தெற்கு தென்கிழக்கே 800 கி.மீ. தொலைவிலும், ஒடிஸாவின் கோபால்பூருக்கு தெற்கே 910 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று மாலை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் அக்வான் புயலாக வலுப்பெறக் கூடும்.

எங்கு எப்போது கரையை கடக்கும்?

மேலும் நாளை நவம்பர் 17ஆம் தேதி மாலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிரப் புயலாக வலுப்பெறும். இதையடுத்து மேலும் மேலும் வலுவடைந்து மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் ஆந்திரா- ஏனாம் கடற்கரையில் நெல்லூர் - டுனி (Tuni) இடையே அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கக் கூடும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 145 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாம்பழ நகரமான டுனி

ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ளது டுனி. இதை மாம்பழம் நகரம் என்றும் அழைக்கிறார்கள். அங்கு 250-க்கும் மேற்பட்ட வகையிலான மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது வர்த்தக நகரமாகவும், விவசாய நகரமாகவும் அறியப்படுகிறது.

இங்கு மாம்பழங்கள், வெற்றிலைகள், சணல் பைகள், முந்திரி உள்ளிட்டவை உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் ஆலைகள் நிறைந்துள்ளன. இந்த டுனி அல்லது துனி பகுதி காக்கிநாடா- ஏனாம் கடற்கரைக்கு அருகே உள்ளது.

பெய்ட்டி புயல்

இந்த டுனி பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு பெய்ட்டி புயல் கரையை கடந்தது. தீவிர புயலாக கரையை கடந்த இந்த பெய்ட்டி புயல், மீண்டும் கடலுக்குள் சென்று வலுவிழந்து துனி பகுதிக்கு அருகிலேயே இரண்டாவது முறையாக கரையை கடந்தது.

டுனி அருகே இதுவரை கரையை கடந்த புயல்கள்!

கடந்த அக்டோபர் 28ஆம் தேதி அர்னாப் புயலும் ஏனாம் கடற்கரையில் நர்சாபூர் மற்றும் காக்கிநாடாவிற்கு இடையே (டுனிக்கு சுமார் 120 கி.மீ. தென்மேற்கே) கரையை கடந்தது.

அது போல் 1996 ஆம் ஆண்டு அதிதீவிர புயல் ஒன்று டுனி அருகே கரையை கடந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஹுட்ஹுட் புயலானது டுனிக்கு வடக்கே அதி தீவிர புயலாக கரையை கடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+