இவ்வளவு இர(ற)க்கம் போதுமா.. தமிழ்நாட்டில் ஜூன் 3 முதல் மாறப்போகுது.. செம்ம குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் வரும் ஜூன் 3ம் தேதி முதல் படிப்படியாக குறைய தொடங்கும் என்று கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்ட போதிலும் தமிழ்நாட்டில் வெயில் குறையவே இல்லை.. பொதுவாக ஜூன் மாதத்தில் வெயில் குறைந்து வசந்த காலம் ஆரம்பித்துவிடும். காய்ந்துகிடந்த செடிகள் எல்லாம் பசுமையாக மாறி, பூக்கள் பூத்துக் குலுங்கும்..

பள்ளிக்கு போகும் குழந்தைகளை அந்த பூக்கள் சிரித்த முகத்தோடு வரவேற்பது போன்ற உணர்வை தரும். கடந்த இரண்டு மாதங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கோடை மழை காரணமாக வெயிலுக்கு சில நாட்கள் கேப்விட்ட சூரியன் மீண்டும் தற்போது சுட்டெரிக்க தொடங்கி உள்ளது.
சென்னை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் , விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. சென்னையில் மற்ற ஊர்களைவிட வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு அளவுக்கு மீறி இருப்பதால், அனல் கக்குகிறது. ஏசி இல்லாத வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். சென்னையில் மின்சாரம் ஒரு இரவு முழுவதும் வராமல் போனால், எமனை நேரடியாக விருந்துக்கு கூப்பிடுவதற்கு சமம் ஆகும். அந்த அளவிற்கு அனல் அடிக்கிறது.
இப்படியான வெயிலில் கஷ்டப்படும் மக்களுக்கு நல்ல செய்தியை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் வரும் ஜூன் 3ம் தேதி முதல் படிப்படியாக குறைய தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.
9 மாவட்டங்களில் இன்று மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: " தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்.
11 மாவட்டங்களில் மழை: நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
வெப்பம் குறையும்: அதனை தொடர்ந்து வெப்ப சலனத்தால் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் நாளை மறுதினம் (3-ந் தேதி) முதல் படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறைய அதிகளவில் வாய்ப்பு இருக்கிறது..
மீனவர்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 கி.மீ. முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் நாளை மறுதினம் வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், திருப்பத்தூர் 4 செ.மீ., அரக்கோணம், அம்முண்டி, விரிஞ்சிபுரம் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது" இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications