பெங்களூர் வானிலையில் மாற்றம்! முன்கூட்டியே தொடங்குகிறதா கோடைக்காலம்?
பெங்களூர்: கர்நாடகா முழுவதும் வறண்ட வானிலை தொடர்வதால் வெயில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அங்கு முன் கூட்டியே கோடை தொடங்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது காலை வேளைகளில் குளிர் நிலவி வருகிறது. ஆனால் பெங்களூர் போன்ற இதமான வானிலை நகரத்தில் கடந்த 12 ஆம் தேதி அன்று கடுமையான வெயில் வாட்டியதாக சொல்லப்படுகிறது.

அதாவது இந்த சீசனிலேயே அன்றைய தினம்தான் அதிகபட்சமாக 33.6 டிகிரி வெப்பநிலை இருந்தது. இந்த வெப்பநிலை எல்லாம் பொதுவாக ஏப்ரல் மாதங்களில்தான் பெங்களூரில் இருக்கும். ஆனால் தற்போது பிப்ரவரி மாதத்திலேயே வெயில் கொளுத்துகிறது.
இதுகுறித்து நம்ம கர்நாடகா வெதர் எனும் எக்ஸ்வலை தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தற்போது பெங்களூரில் உள்ள வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகம். இதை பார்க்கும் போது முன்கூட்டியே கோடை காலம் தொடங்கி விட்டதா என்ற கேள்வி எழுகிறது.
எனினும் இரவு நேரங்களில் வெப்பநிமலை 16 டிகிரியாக இருப்பதால் குளிர் நிலவுகிறது. இந்த வெப்பநிலை இயல்பை விட 1.4 டிகிரி குறைவு ஆகும். இது போன்று சீசனே இல்லாமல் பெங்களூரில் வெப்பம் ஏற்படுவதற்கு உலகம் வெப்பமயமாதல் காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அது போல் தற்போது நிலவி வரும் லா நினோ விளைவால் தென்கிழக்கு மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவில் கனமழையை கொண்டு வந்துள்ளது. இதனால் கடலின் வெப்பநிலை அதிகரிப்பதால் தீபகற்ப இந்தியாவில் அடுத்த 5 முதல் 6 வாரங்களுக்கு வெப்பம் இருக்கும்.
மிதமானது முதல் லேசானது வரையிலான கிழக்கத்திய மற்றும் தென் கிழக்கத்திய காற்றால் கர்நாடகா முழுக்க வறண்ட வானிலையே தொடரும். பெங்களூரின் புறநகர் பகுதிகளில் பனி மூட்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
காலை நேரங்களில் பெங்களூரில் தெளிவான மேகம் இருக்கும். இனி வரும் காலங்களில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 16 டிகிரியும் இருக்க வாய்ப்பிருக்கிறது. இது போல் வெப்பநிலை அதிகரிப்பதும் இரவு பகலில் மாற்றங்கள் உருவாவதை பார்த்தால் முன்கூட்டியே கோடை தொடங்கும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூரில் இன்றைய தினம் 32 டிகிரி சென்டிகிரேட்டாக உள்ளது.
பெங்களூர் போன்ற நகரங்களில் வெயில் காலம் என்றாலும் அதிகம் கொளுத்தாது என்பார்கள். புழுக்கமும் இருக்காதாம். ஆனால் இந்த முறை கோடை தகிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் உலக வெப்பமயமாதலாக இருக்கலாம்.
கடந்த 1990 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 30.9 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 17.6 டிகிரி செல்சியஸாக வெப்பம் பதிவாகி இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பிப்ரவரி மாதங்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 33 டிகிரி முதல் 35.5 டிகிரியாகவும் குறைந்தபட்சமாக 13 டிகிரி முதல் 16.5 டிகிரியாகவும் இருக்கிறது.
கடந்த பிப்ரவரி 17, 2005 ஆம் ஆண்டு பெங்களூரில் 35.9 டிகிரி வெப்பநிலையால் நகரமே தகித்தது. அதே வேளையில் 1884 ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி வெப்பநிலை 9.6 டிகிரியாக இருந்ததால் குளிராக இருந்தது.
கோடை எப்போது தொடக்கம்: மகா சிவராத்திரியையொட்டி பெங்களூரில் கோடை தொடங்கலாம் என தெரிகிறது. பெங்களூரில் ஜனவரிக்கு பிறகு பிப்ரவரியில் மழை இல்லை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications