வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது? தமிழகத்திற்கு குட் நியூஸ் சொன்ன வானிலை மையம்
சென்னை: வங்கக் கடலில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளா, கர்நாடகா, தமிழகத்தின் தென் பகுதி, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு பலனை கொடுக்கும் தென் மேற்கு பருவமழை நேற்றுடன் விலகிவிட்டது. இந்த நிலையில் அடுத்ததாக வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது.

இது தமிழகத்திற்கு மழைப்பொழிவை கொடுக்கும். இந்த சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே தென்மேற்கு பருவமழையால் பெருமளவு மழை தமிழகத்திற்கு கிடைத்துவிட்டாலும் அடுத்த ஆண்டு வரும் கோடையை சமாளிக்க இந்த சீசன் முக்கியமானது.
பொதுவாக வடகிழக்கு பருவமழை சீசன் அக்டோபர், நவம்பர் காலங்களில் தொடங்கும். இந்த நிலையில் வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தென்மேற்கு ராஜஸ்தான் பகுதிகளில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை வெளியேறத் தொடங்கியுள்ளது. வழக்கமாக செப்டம்பர் 17ஆம் தேதி ராஜஸ்தான் பகுதியில் வெளியேறும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதமாக வெளியேறத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வரும்அக்டோபர் மாதம் 15 ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு தென் மேற்கு பருவமழை வெளியேறும் என தெரிகிறது.
இதன் பிறகு அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications