இனிதான் ஆட்டமே இருக்கு.. தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே அதிகரிக்கும் வெயில் - வானிலை மையம்
சென்னை: தமிழ்நாடு மட்டுமல்லாது தென்னிந்தியாவின் மேலும் 3 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டும் தென்னிந்தியாவில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் வன விலங்குகள் மட்டுமின்றி மக்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தென்னிந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கடலோர ஆந்திரா மற்றும் கடலோர ஒடிசாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. கேரளாவை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாததால் அணையில் இருந்த நீர் மட்டம் வேகமாக குறைந்தது. எனவே மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால், அணையில் உள்ள மீன் வளத்திற்கு தேவையான நீர் கூட விரைவில் வற்றிவிடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்த அளவில், தென் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் நீர் இருந்தாலும், சில முக்கியமான நீர் நிலையில் நீர் போதுமான அளவு இல்லை. குறிப்பாக டெல்லா மாவட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் மேட்டூர் அணையில் போதுமான அளவு நீர் இல்லை. இந்நிலையில் வெயில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால் இருக்கும் கொஞ்சம் நீரும் விரைவில் வறண்டு விடும் என்று அஞ்சப்படுகிறது.
இதே நிலைமைதான் ஆந்திர, ஒடிசாவிலும் இருக்கிறது. எனவே அடுத்த சில மாதங்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியமான பிரச்னையாக இருக்கிறது.
அதேபோல ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உத்தரப் பிரதேசம், பீகார், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஓரளவு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications