அலர்ட்.. தமிழகத்தில் 10 மாவட்டங்களை குறிவைத்த மழை.. அடுத்த 3 மணிநேரம் முக்கியம்- உங்கள் ஊர் இருக்கா?
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தமட்டில் மாலை நேரங்களில் மழை என்பது அதிகரித்துள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும் தற்போது மழை என்பது விட்டுவிட்டு பெய்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் என்பது மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு தான் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக கோவை திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இரவு 7 மணிக்கு வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. அதாவது அடுத்த 3 மணிநேரத்தில் (இரவு 10 மணி வரை)தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது.
மேலும் நாளைய தினத்தை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவம், 3ம் தேதி முதல் 7 ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதோடு தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications