மஞ்சள் + ஆரஞ்சு அலர்ட்.. இன்றும், நாளையும் 19 மாவட்டங்களில் ரவுண்ட் கட்டும் மழை.. வானிலை மையம்!
சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், 14 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. ்அதேபோல் நாளைய தினமும் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் அலர்ட்டு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. போதாக்குறைக்கு வெப்பஅலை வேறு மக்களை கடும் அவதிக்குள்ளாக்கியது. இதன் தொடர்ச்சியாக தான் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது.

இந்த வெயில் உக்கிரமாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் தான் கோடை மழை வந்து மொத்த தமிழ்நாட்டையும் ஜில்லென மாற்றிவிட்டது. தற்போது சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
நேற்றைய தினம் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் தான் இன்று 5 மாவட்டங்களில் மிககனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும், 14 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் இன்று காலையிலேயே தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி பகுதியில் பலத்த காற்று வீச தொடங்கியது. இதனால் நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதேபோல் நாளைய தினம் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டால் அந்த மாவட்டங்களில் குறைந்தபட்சம் 64.5 மில்லி மீட்டர் முதல் அதிகபட்சமாக 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேவேளையில் ஆரஞ்ச் அலர்ட் என்றால் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு












Click it and Unblock the Notifications