தீவிரமடையும் கோடை மழை.. இடி, மின்னலிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? இதை செய்யுங்க போதும்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்துள்ளது. இடி, மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இடி, மின்னல் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்கமாக தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில்தான் கோடை வெயில் தொடங்கும். ஆனால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பிப்ரவரி இறுதியில் வெயில் தொடங்கிவிட்டது. மார்ச்சில் ஏற்றம் கண்ட வெயில், ஏப்ரலில் உச்சத்தை தொட்டது. தமிழகத்தின் பரவலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியிருந்தது.

குறிப்பாக ஈரோடு, கோவை, கரூர் என கொங்கு மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், திருத்தணி என வட மாவட்டங்களில் வெயில் 105 டிகிரிக்கு அதிகமாக பதிவாகியிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது கோடை மழை தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் தென் மாவட்டங்களில் தலையை காட்டிய மழை, கொஞ்சம் கொஞ்சமாக வட மாவட்டங்களை நோக்கி ஏற தொடங்கியது.
100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான பகுதிகளில் மழை புரட்டி எடுத்தது. ஏற்காடு, ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழை தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. எனவே தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இடி, மின்னல் தாக்கி தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டுமல்லாது கடந்த 24 மணி நேரத்தில் 15 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. அதேபோல 7 குடிசைகளும் வீடுகளும் சேதமடைந்துள்ளன என பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்திருக்கிறது.
இப்படி இருக்கையில் இடி, மின்னல் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. "இடி, மின்னல் பெரும்பாலும் மனிதனைத் தாக்குவதில்லை. இருப்பினும் சில நேரங்களில் மனிதனின் உடலைத் தாக்கிச் சிறு காயத்திலிருந்து மரணம் வரை ஏற்படுத்துகின்றன.
மழைக்காலத்தில் மேகங்களில் மின்சக்தி நிறைந்திருக்கும். சில சமயங்களில் இரண்டு மேகங்கள் ஒன்றையொன்று நெருங்கி வரும் அப்பொழுது ஒரு மேகத்திலிருந்து மின்சக்தி மற்றொரு மேகத்திற்குப் பாயும். இவ்வாறு மின்சக்தி பாயும் போது கண்ணைப் பறிக்கும் ஒளி உண்டாகிறது. இதுதான் மின்னல். இந்த மின்னல் பூமிக்கு வரும்போது உயர்ந்த கட்டிடங்களைதான் முதலில் தாக்குகிறது. கிராமங்களில் உயரமான கட்டிடங்கள் இல்லாததால், மரங்களை தாக்குகிறது.
மழைக்காக மரத்திற்கு அடியில் ஒதுங்கி நிற்பவர்கள் இப்படி மின்னல் தாக்கப்படும்போது உயிரிழக்கிறார்கள். பலர் மின்னல்தாக்கி உயிரோடு இருந்திருக்கிறார்கள். எனவே மின்னலை கண்டு அச்சமடைய தேவையில்லை. இருப்பினும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்தால், இந்த பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
மின்னல் மனிதர்களை தாக்கியவுடன் உடனடியாக ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் வரும். பின்னர் நரம்பு மண்டலம் செயலிழந்த உயிர் போய்விடும். சில நேரங்களில் மின்னலின் அதிக வெளிச்சம் விழித்திரையை கிழித்து கண் குருடாவதும் உண்டு. கண்ணிமைகளில் அழற்சி, இரத்தக்கசிவு, கண்ணின் அமைப்பில் மாறுதல் போன்றவையும் ஏற்படும்.
இது தவிர உடலில் வலிப்பு, ஞாபகமறதி, தன்னிலை தடுமாற்றம் காது கேளாமை, வாய் பேச முடியாமை, உள் காயம் சிராய்ப்பு, எலும்பு முறிவு போன்ற பாதிப்புகளும் ஏற்படும். மின்சாரம் உலோகங்களில் எளிதில் பாயும். உடம்பில் உலோகம் ஏதாவது அணிந்திருந்தால், உதாரணமாக ஜிப், பெல்ட், நகை ஆகியவை மூலம் மின்னல் பாய்ந்து ஆங்காங்கே பரவி தீக்காயங்களை ஏற்படுத்தும்.
மின்னல் தாக்கியவுடன், சாதாரண தீக்காயங்களுக்கு வெறும் வெளிப்பூச்சு மருந்துகள் மட்டும் போதுமானது. ஆனால் மூச்சும் இருதயத் துடிப்பும் நின்றவர்களுக்கு வாயின் மூலமோ அல்லது முதுகை அமுக்கியோ செயற்கைச் சுவாசம் கொடுக்க வேண்டும். இருதயத் துடிப்பு இருக்கின்றதா என்பதைப் பார்த்து நெஞ்சுக் குழிக்கு இடதுபுறம் அமுக்கி இருதயத் துடிப்பை உண்டாக்க வேண்டும்.
மழை வரும் போது, மின்னல் மின்னும் போது மரத்தடியில் ஒதுங்கவே கூடாது. மழையில் நனைந்து செல்லும் பொழுது உலோகப் பொருட்கள் உடலில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழைக்கு உபயோகிக்கும் குடையில் இரும்புப் பிடி இல்லாமல் இருப்பது அவசியம். மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது வெட்டவெளியில் நனைந்து கொண்டு ஒதுங்கக்கூடாது. நீரில் நீந்தக்கூடாது. தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கக்கூடாது.
வெட்ட வெளியில் மின்னல் மின்னும் பொழுது மழைக்கோட்டுப் போட்டிருந்தால் அதன் மேல் படுத்துக் கொள்ள வேண்டும். மின்னல் மனிதனைத் தாக்கிச் சிறு காயங்கள் முதல் மரணம் வரை ஏற்படுவது ஏதோ சிலவேளைகளில் மட்டும்தான். மேற்கூறிய தடுப்பு முறைகளைக் கையாண்டால் அவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்" என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?












Click it and Unblock the Notifications