வங்கக்கடலில் விஸ்வரூபம் எடுக்கும் காற்றழுத்த தாழ்வு மையம்.. புயலாக மாறுமா? வானிலை மையம் மெசேஜ்
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலிமை அடைந்து கொண்டே இருக்கிறது. இதனால் டிசம்பர், 10 முதல் டிசம்பர்., 13 வரை 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ள என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தாழ்வு மையம் புயலாக மாறாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு தாழ்வு மையம் புயலாக மாறுவதற்கு கடலில் வெப்பநிலை கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது 27 டிகிரி செல்ஸியஸை விட அதிகம் இருக்க வேண்டும். அதோடு தாழ்வு மையம் நிலப்பரப்பில் இருந்து தூரமாக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த சூழ்நிலைகள் தற்போது வங்கக்கடலில் உள்ள தாழ்வு மையத்திற்கு சாதகமாக இல்லை. இதனால் வங்கக்கடலில் உருவான தாழ்வு மையம் புயலாக மாறாமல் கடுமையான மழையை கொடுக்கும்.
சென்னை மற்றும் பறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில்
பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது வடகடலோர இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பாகுதிகளில் மிதமான பெய்யக்கூடும்.
இதன் காரணமாகவே 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
09.12.2024; கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் முக்கிய இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை தம்மார், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10.12.2024: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11.12.2024 மற்றும் 12,12. 2004 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.12.2024 மற்றும் 14.12.2024 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பாதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.12.2024 - 16.12.2024 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தாகப்பட்டினம். மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள். பதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், காலப்புரம். செங்கல்பட்டு, திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி பெரம்பலூர். அரியலூர். திருச்ரொப்பள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications