வங்கக்கடலில் எழுந்து வரும் ராட்சசன்.. புதிய புயல் தாக்க போகிறதா? இந்த 6 விஷயம்தான் மேட்டரே!
சென்னை; வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடலில் இந்த தாழ்வு பகுதி வருகிறது. இது புயலாக மாறுமா என்று சென்னை வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்துள்ளன.
இன்று புயல் சின்னம் உருவாகி வரும் நிலையில்.. வங்கக்கடலில் புயலுக்கு ஏற்றபடி வானிலையில் திடீரென பல்வேறு மாற்றங்கள் நடக்க தொடங்கி உள்ளன.

தமிழ்நாட்டில் கோடை காலம் முடிந்த நிலையில் சூடு தணிந்து.. தற்போது அவ்வப்போது கடுமையாக மழை பெய்து வருகிறது. அதன்படி 3 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்டு உள்ளது.
புயல் வருகிறது: இந்த மழைக்கு இடையே திடீரென வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. அடுத்த 2 தினங்களில் இந்த தாழ்வுக்கு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த வாரம் இந்த தாழ்வு பகுதி புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இதன் மூலம் சென்னை டூ தென் மாவட்டங்கள் வரை மொத்தமாக பரவலாக மழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக புயல் உருவாவது எப்படி?; பொதுவாக ஒரு சுழற்சி கடலுக்கு மேலே இருக்க வேண்டும். இது வெப்ப நிலை காரணமாக வலிமை அடைந்து தாழ்வு மண்டலமாக மாறும்.
1, இந்திய தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும்.
2, அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்தில் இதை விட அதிக வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை இருந்தால் மட்டுமே புயலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். தற்போது கோடைகாலம் என்பதால் இந்த சூழ்நிலை சரியாக உள்ளது.
3. அதேபோல் கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது புயலாக மாறு. எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும்.
4. ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறாமல் போய் இருக்கின்றன.
5. அதேபோல் இன்னொரு விஷயம் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும்.
6.வறண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும். இப்போது கோடைகாலம் என்றாலும் கடந்த வாரம் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வந்த குளிர்ந்த காற்று புயலுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கிவிட்டது.
இந்த விஷயங்கள்தான் பொதுவாக ஒரு புயல் உருவாவதற்கான சூழ்நிலையை தீர்மானிக்கும். இந்த விஷயங்கள் சாதகமாக அமைந்தால் புயல் உருவாவதற்கான ஏற்ற சூழ்நிலைகள் இருக்கும். வங்கக்கடலில் இந்த எல்லா விஷயங்களும் தற்போது புயலுக்கு சாதகமாக உள்ளது. இதனால் அந்த புயல் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.












Click it and Unblock the Notifications