இஸ்ரோவில் வேலைவாய்ப்பு.. 141 பணியிடங்கள்.. 10, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஜாக்பாட்
சென்னை: இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டெக்னீஷியன் உள்ளிட்ட 141 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எம்.இ முதல் ஐடிஐ, டிப்ளமோ என பத்தாம் வகுப்பு முடித்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. விண்வெளித் துறையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுக்கு சவால் விடுக்கும் வகையில் இஸ்ரோ உலக அரங்கில் பெருமைகளை சேர்த்து வருகிறது. இந்திய விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் இஸ்ரோவில் வேலை பார்க்க வேண்டும் என்பது பல லட்சக்கணக்கான தேர்வர்களின் விருப்பமாக உள்ளது.

இஸ்ரோவில் வேலை
இஸ்ரோவை பொறுத்தவரை காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது டெக்னீஷியன் உள்ளிட்ட 141 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* டெக்னீஷியன் உள்ளிட்ட பணியிடங்கள்: 126
* சமையலர்: 03
* ஃபயர் மேன்: 06
* டிரைவர்: 03
* நர்ஸ்: 01
* வரைவாளர்: 01
* டெக்னீஷியன் B (கணினி அறிவியல்): 01
கல்வி தகுதி:
* எம்.இ., எம்.டெக்., பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., ஐடிஐ, டிப்ளமோ, பத்தாம் வகுப்பு ஆகிய கல்வி தகுதிகளை கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். டிரைவர் பணியிடத்திற்கு இலகு ரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்து இருப்பது அவசியம்.
* தேர்வு செய்யப்படுவர்கள் செகந்திராபாத் (தெலுங்கானா), மகேந்திரகிரி (தமிழ்நாடு), ரசாயனி (மகாராஷ்டிரா), வலியமலா (கேரளா), திருவனந்தபுரம் (கேரளா), ஸ்ரீஹரிகோட்டா (ஆந்திரப் பிரதேசம்), டேராடூன் (உத்தரகாண்ட்) உள்ளிட்ட இடங்களில் பணி அமர்த்தப்படுவார்கள்.
வயது வரம்பு:
* 18 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சயிண்டிஸ்ட்/என்ஜினியர் (மெஷின் டிசைன்) உள்ளிட்ட சில பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். தேர்வர்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் படித்து உறுதி செய்து கொள்ளவும்.
சம்பளம் எவ்வளவு?
* சயிண்டிஸ்ட் / என்ஜினியர்: ரூ.56,100 - ரூ.1,77,500/-
* டெக்னிக்கல் அசிஸ்டண்ட்: ரூ.44,900 - ரூ.1,42,400/-
* ரேடியோகிராபர்: ரூ.25,500 - ரூ.81,100/-
* டெக்னீஷியன் 'B' - லெவல் 3: ரூ.21,700 - ரூ.69,100/-
* சமையலர்: ரூ.19,900 - ரூ.63,200/-
* ஃபயர்மேன்: ரூ.19,900 - ரூ.63,200/-
* டிரைவர்: ரூ.19,900 - ரூ.63,200/-
* நர்ஸ் 'B' - லெவல் 7: ரூ.44,900 - ரூ.1,42,400/-
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னை, நெல்லை ஆகிய நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். விண்ணப்பிக்க வரும் 14.11.2025 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://apps.shar.gov.in/sdscshar/advt_2025/Bilingual%20Advertisement%20for%20all%20posts%2016.10.2025.pdf
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications