சென்னையில் பகலில் பயங்கரமான வெயில் .. இரவில் வெளுக்கும் மழை .. அடியோடு மாறிய வானிலை
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருந்து வந்த நிலையில் இந்த மழை மண்ணை மட்டுமல்ல மக்களையும் குளிர வைத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 28°-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறியிருந்தது.

சென்னை வானிலை ஆய்வு மையம் சொன்னது போலவே இன்று சென்னையில் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக வெயில் கடுமையாக இருந்து வந்தது. வெப்ப நிலை பகலைவிட இரவில் மிக அதிகமாக தெரிந்தது. இரவில் மிக புழுக்கமாக இருந்தது. குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையில் வீடுகளுக்குள் மக்கள் உட்காரவே முடியாஅளவிற்கு இருந்தது.
இன்று பகலில் வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. கோடைக்காலத்தில் உள்ளது போன்று வெயில் வாட்டி வதைத்ததால், வீடுகளை விட்டு வெளியில் சென்ற மக்கள் பரிதவித்து போனார்கள். இன்றை வெயிலை பார்க்கும் போது, கண்டிப்பாக மழை வரும் என்று மக்களே எதிர்பார்த்தார்கள்..
எதிர்பார்த்தது போலவே கனமழை வெளுத்து வாங்குகிறது. பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி, பல்லாவரம், தாம்பரம், மயிலாப்பூர், அடையாறு , புழல், ஆதம்பாக்கம் என எல்லா பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வீடுகளுக்குள் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் சாலைகளில் பயணிக்கும் மக்கள் உடனடியாக மழை நிற்கும் வரை ஒதுங்கி நிற்பது நல்லது. ஏனெனில் ஜிஎஸ்டி சாலை உள்படபல்வேறு சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.மடிப்பாக்கம் உள்பட மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளில் வாகனங்களில் மட்டுமல்ல, நடந்து செல்வதையும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சாலை எது, மழை நீர் வடிகால்கள் எது என்பது தெரியாத அளவிற்கு நிலைமை இருக்கிறது. மழை காரணமாக மின் வயர்கள் சரிந்து விழும் வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications