இது டிரெய்லர் தான்.. நெக்ஸ்ட் 5 நாள் முக்கியம்! சென்னை மக்களே ரெயின்கோட் ரெடியா? வெதர்மேன் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இது வெறும் டிரெய்லர் தான். அடுத்த 5 நாட்கள் ரொம்ப முக்கியம் எனவும், சென்னை மக்களே இன்று ரெயின்கோட்டை கையோடு எடுத்து செல்லுங்கள் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது இருப்பது கோடை காலமா? இல்லை மழை காலமா? என சந்தேகிக்கும் அளவுக்கு மாநிலம் முழுவதும் சீதோஷ்ண நிலை என்பது மாறிவிட்டது. பொதுவாக மே மாதத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கும்.

ஆனால் தற்போது கோடை வெயில் மறைந்து மழை என்பது பெய்து வருகிறது. இதனால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது தற்போது வெயிலின் தாக்கம் என்பது பல்வேறு மாவட்டங்களில் குறைந்துள்ளது.
லிஸ்ட்டில் 9 மாவட்டங்கள்.. காலை 10 மணி வரை மழை கொட்டும்.. வானிலை மையம் தந்த முக்கிய அறிவிப்பு
நேற்றைய தினம் டெல்டா மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக தங்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 158 மில்லி மீட்டர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 136.4 மில்லி மீட்டர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 131 மில்லி மீட்டர் மழை பெய்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடியில் 111.8 மில்லிமீட்டர் மழையும், தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 106.4 மில்லி மீட்டர் மழையும், அதிராம்பட்டினத்தில் 102.8 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழைக்கான மஞ்சள் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் தற்போதைய மழை என்பது வெறும் டிரெயிலர் தான் எனவும், அடுத்த 5 நாட்கள் ரொம்ப முக்கியம் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இப்போது நாம் பார்த்து கொண்டிருப்பது மழை டிரெய்லர் தான். தமிழ்நாட்டுக்கான மெயின் பிக்சர் இன்னும் வரவில்லை. தமிழ்நாடு கடற்கரையில் அடுத்த 5 நாட்கள் மேல்மட்ட காற்று சுழற்சி நீடிக்க உள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கான நல்ல நாட்கள் வர உள்ளது.
மஞ்சள் + ஆரஞ்சு அலர்ட்.. இன்றும், நாளையும் 19 மாவட்டங்களில் ரவுண்ட் கட்டும் மழை.. வானிலை மையம்!
மேலும் சென்னையில் இன்றைய தினம் சூரியஒளியுடன் ஆரம்பித்து இருந்தாலும் கூட காலநிலை என்பது மீண்டும் மாற உள்ளது. இதனால் ரெயின்கோட்டை இன்றும் மறக்க வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழ்நாடு கடற்கரையில் அடுத்த 5 நாட்கள் மேல்காற்று சுழற்சி நீடிப்பதால் கனமழை வாய்ப்புள்ளது எனவும், சென்னையில் இன்று காலை வெயில் அடித்தாலும் கூட திடீரென்று வானிலை மாறி மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications