லிஸ்ட்டில் 9 மாவட்டங்கள்.. காலை 10 மணி வரை மழை கொட்டும்.. வானிலை மையம் தந்த முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் என நாம் அனைவரும் நினைத்தோம். இதற்கு முக்கிய காரணம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்ப அலையுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்தது தான்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 28 ம் தேதி வரை நீடிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய கோடை மழையால் கத்திரி வெயிலில் இருந்து நாம் தப்பித்து விட்டோம்.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மிதமானது முதல் கனமழை வரை மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மழை இல்லாவிட்டாலும் கூட வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டம் காணப்படுகிறது. மேலும் நேற்றைய தினம் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில் தான் இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் இடி, மின்னல் கூட இருக்கலாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி காலை 10 மணி வரை தூத்துக்குடி, ராமநாதபுரம் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு












Click it and Unblock the Notifications