காமராஜர் ஆட்சி மாதிரி.. சிஎம் விஜய் ஆட்சியில் லஞ்சமே இல்ல! பாராட்டு பத்திரம் வாசித்த ப.சிதம்பரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதல்வருமான விஜய் ஆட்சியில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் தவிர்க்கப்பட்டிருக்கிறது, அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் மாறுதல் உள்ளிட்டவைக்கு லஞ்சம் தவிர்க்கப்படுகிறது. இன்னும் பல துறைகளில் லஞ்சம் தவிர்க்கப்பட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்த நாள் முன்னிட்டுமதுரை நாகமலை புதுக்கோட்டை தனியார் கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

P Chidambaram Praises Vijay

நிகழ்வில் அந்த கல்லூரி மைதானத்தில் பெருந்தலைவர் காமராஜரின் உருவத்தை மாணவர்கள் மாணவிகள் 2000 பேர் கொண்ட குழுவினர் உருவாக்கினர். "லஞ்சம் தவிர் " " நெஞ்சம் நிமிர் " என்ற வாசகத்தையும் உருவாக்கினர்.

பின்னர் நிகழ்வில் பேசிய ப.சிதம்பரம்," ஒரு வாரமாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்தது என விழா நடைபெறுகிறது. இவ்விழாக்களை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மாணிக்கம் தாகூர் என சிறப்பாக நடத்தி வருகிறார். அவருக்கு எனது பாராட்டுக்கள். காமராஜர் 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். ஒன்பது ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சம் என்பதே கிடையாது. லஞ்சம் தவிர்த்து ஆட்சி நடந்தது.

புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியில் லஞ்சம் தவிர்க்கும் முயற்சியில் நடைபெறுகிறது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் தவிர்க்க முயற்சி நெருங்கப்பட்டுள்ளது. அதற்காக பாராட்டுக்கள். தனியார் பள்ளியில் ஆசிரியர் பள்ளிகள் அரசு நியமனம் போன்றவற்றில் லஞ்சம் தவிர்க்கப்படுகிறது. அதற்கு பாராட்டுக்கள் ஆசிரியர் பணி நியமனம் மாறுதல் உள்ளிட்டவருக்கு லஞ்சம் தவிர்க்கப்படுகிறது. அதற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

லஞ்சம் தவிர்க்க காமராஜர் ஆட்சி 9 ஆண்டுகள் எப்படி செயல்பட்டதோ அதேபோல் விஜய் ஆட்சியை கடந்த ஒரு மாதமாக நல்ல முயற்சி எடுத்து வருகிறது. இன்னும் பல முயற்சிகள் எடுத்து பல துறைகளில் லஞ்சங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்/ அதற்கு விஜய் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். தமிழ்நாட்டில் மீண்டும் லஞ்சம் தவிர்த்த காமராஜர் ஆட்சி ஐந்தாண்டு நடைபெற வேண்டும்" என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+