டாட் காம் பபுள் 2.O! டிரம்ப் மீது நம்பிக்கை இல்லை.. அதிருப்தியில் அமெரிக்க மக்கள்! மொத்தமா சரியுதே!
வாஷிங்டன்: அமெரிக்காவில் தற்போது பொருளாதார மந்த நிலை ஏற்பட தொடங்கியிருக்கிறது. கடந்த 2000ம் ஆண்டு அமெரிக்கா இதேபோன்று பெரிய சிக்கலில் மாட்டியிருந்தது. அதை 'டாட் காம் பபுள்' என்று பொருளாதார ஆய்வார்கள் குறிப்பிட்டிருந்தனர். தற்போது இன்று இதேபோன்ற சூழலில் அமெரிக்கா மீண்டும் சிக்கியிருக்கிறது.
2000ம் ஆண்டு இன்டெர்நெட் என்கிற ஒன்றை நம்பி.. மொத்த முதலீட்டாளர்களும் பங்கு சந்தையில் எக்கச்சக்கமாக முதலீடு செய்து.. பின்னர் திடீரென அனைத்தையும் விற்று வெளியேற தொடங்கினர். இது அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதேபோன்ற நிலைதான் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
அமெரிக்காவில் தற்போது வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில்தான் இருக்கிறது. பண வீக்கமும் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. ஆனால், அதிபர் டிரம்ப் மீது யாரும் நம்பிக்கை வைக்கவில்லை என்பதுதான் பிரச்சனையே! CNBC நடத்திய ஆய்வில், 61% அமெரிக்களிடத்தில் இப்போதைய மற்றும் எதிர்கால பொருளாதாரம் குறித்து நம்பிக்கை இல்லாத சூழல் இருக்கிறது. வாழ்க்கை செலவுகள் அதிகரித்ததற்கு காரணம் டிரம்ப் தான் என்று அவர்கள் ஆனித்தரமாக நம்புகிறார்கள். 60% மக்களுக்கு, டிரம்ப் பொருளாதாரத்தை கையாளும் விதம் பிடிக்கவில்லை.
செலவுகள் குறைப்பு
இவ்வளவு பிரச்சனைகள் இருப்பதால், மக்கள் தங்கள் அன்றாட செலவுகளை குறைத்துக்கொண்டிருக்கின்றனர். 47% மக்கள் மருந்து மற்றும் உணவுக்கு கூட செலவு செய்வதை குறைத்துக்கொண்டிருக்கின்றனர். இது கடந்த ஏப்ரல் மாதத்தை விட இப்போது 6% அதிகரித்திருக்கிறது. அதேபோல 3ல் 2 சதவிகித மக்கள் வெளியில் சாப்பிடுவது, பொழுதுபோக்கு, சுற்றுலா மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாட்டை குறைத்துக்கொண்டிருக்கின்றனர்.
மாதம் ரூ.28 லட்சம் (30,000 USD) வரை சம்பாதிப்பவர்களில் 60% பேர் அத்தியாவசிய செலவுகளை குறைத்திருக்கின்றனர். மாதம் ரூ.28 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளாக கருதப்படுகிறார்கள். அதேபோல மாதம் ரூ.1 கோடி சம்பாதிப்பவர்கள் (1 லட்சம் USD) 35% பேர் தங்கள் செலவுகளை குறைத்துக்கொண்டிருக்கின்றனர்.
வேகமாக விற்கப்படும் பங்குகள்
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வேகமாக விற்க தொடங்கியிருக்கின்றனர். மொத்தமாக 7,760 டாலர் அளவுக்கு பங்குகளை விற்றிருக்கின்றனர். ஆனால் சோகம் என்னவெனில், இதை வாங்க ஆள் இல்லை என்பதுதான். கேட்டால்.. பங்கு சந்தை மதிப்பு ஓவராக இருக்கு.. அதனால் காசு போட பயமா இருக்கு என்று கூறுகிறார்கள்.
பங்கு சந்தை நிலைமை
வெளியிலிருந்து பார்ப்பதற்கு பங்கு சந்தை வளர்ச்சியடைந்திருப்பதை போன்றுதான் தோன்றும். இதற்கு காரணம் AI. பல சிறிய செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் AI நிறுவனங்கள் பங்கு சந்தையில் அதிக அளவில் காசு போட்டிருந்தன. இதுவே முதலீட்டாளர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஓவரா இன்வெஸ் பண்ணிட்டமோ? என்று அச்சமடைந்திருக்கிறார்கள். அதேபோல, பல பெரிய AI நிறுவனங்கள் பங்கு சந்தைக்குள் மாஸ் எண்ட்ரி கொடுக்க இருக்கின்றன.
இதையெல்லாம் பார்த்து உஷாரான சிறிய நிறுவனங்கள்.. எரியுற வீட்டில் புடுங்குனது வரைக்கும் லாபம் என்று.. பங்குகளை விற்று விட்டு மூட்டை முடிச்சியை கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டன. இதனால் பங்கு சந்தை காற்று வாங்க தொடங்கியிருக்கிறது.
டிரம்ப் மீது அதிருப்தி
இதெல்லாம் ஒருபுறம் இருக்க.. மறுபுறம் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. ஈரானை அட்டாக் செய்து அணு ஆயுதங்களை அமெரிக்கா ஒழித்துவிடும் என்று ஆரம்பத்தில் நம்பியிருந்த மக்கள்.. டிரம்பின் நடவடிக்கைகளை பார்த்து.. 'நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட' என்று நினைக்க தொடங்கியிருக்கின்றனர்.
அதாவது ஈரானின் அணு ஆயுத திட்டத்தை தடுக்க ராணுவம் மூலமாக நடவடிக்கை எடுக்கலாம் என்று வெறும் 48% மக்கள் மட்டுமே நம்புகின்றனர். ஏப்ரல் மாதத்தில் 53% மக்கள் நம்பியிருந்தனர்.
ஆக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதை பார்க்கும்போது.. கடந்த 2000ம் ஆண்டு ஏற்பட்ட 'டாட் காம் பபுள்' பிரச்சனை போலவே.. இப்போதும் புது பிரச்சனை உருவாகியிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.















Click it and Unblock the Notifications