தவெக எம்.எல்.ஏ குதிரை பேர வழக்கு.. ரூ.2 கோடி ரொக்கப் பணத்துடன் 3 பேரை அலேக்காக தூக்கிய போலீசார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக எம்.எல்.ஏ குதிரை பேர வழக்கில் ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 12 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொரட்டூரைச் சேர்ந்த சீனிவாசன் என்ற கருணாநிதி, சாலிகிராமத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் ஆகியோரை திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

TVK MLA Horse-Trading Case

குதிரை பேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, விசாரணைக்கு ஆஜராகுமாறு திருவல்லிக்கேணி காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.

அதேபோல், சிங்கப்பூரில் வசித்து வரும் லட்சுமண பெருமாள் தொலைபேசி மூலம் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரது பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்யும் நடவடிக்கையில் திருவல்லிக்கேணி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்ட சிலருக்கு தலா 5 கோடி வரை பணம் வழங்கப்பட்டதாகவும் விசாரணையில் ஷாக் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கணக்கில் காட்டப்படாத ஹவாலா பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக சந்தேகம் எழுந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவிடம் குதிரை பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 12 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொரட்டூரைச் சேர்ந்த சீனிவாசன் என்ற கருணாநிதி, சாலிகிராமத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் ஆகியோரை திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹவாலா பணப் பரிமாற்றம் தொடர்பான அம்சங்கள் இருப்பதால், அமலாக்கத்துறையும் இந்த வழக்கு ஆவணங்களை பெற்று தனியாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+