"என் உறவினர் என யாராவது சொன்னால் தள்ளி வைங்க".. அமைச்சர் சம்பத்குமார்

Subscribe to Oneindia Tamil

கோவை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். கோவை அமைச்சரான சம்பத் பெயரை சொல்லி சிலர் அட்ராசிட்டி செய்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில்

கோவை மாவட்ட அமைச்சர்களான சம்பத்குமார், விக்னேஷ் தொழில்துறையினருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவையை சேர்ந்த பல்வேறு சங்கங்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வைத்தனர். கோவையின் உள்கட்டமைப்பு, தொழில்துறை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தொழில் அமைப்புகள் பரிந்துரைகள் வழங்கப்பட்டது. தவெக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு தொழில்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

if-anyone-use-my-name-as-relative-please-avoid-them-said-sampathkumar

தள்ளி வையுங்கள்

நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சம்பத்குமார் பேசுகையில், " லஞ்சம், ஊழலற்ற அரசு நிர்வாகத்தை செயல்படுத்தினாலே நாடு முன்னேற்றமடையும். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். அமைச்சரின் நண்பர், உறவினர் என்று சொல்லி யார் வந்தாலும் அவர்களை தள்ளி வையுங்கள். எங்கள் பெயரை சொல்லி வருபவர்கள் யாருக்கும், எந்த சலுகையும் தர வேண்டாம்.

10 நாட்கள் வேலை 2 நாட்களில் முடிகிறது என்பதற்காக குறுக்கு வழியில் செல்ல கூடாது. லஞ்சம், ஊழற்ற நிர்வாகத்திற்கு அனைவரின் ஒத்துழைப்பும் கோவையில் கடைகள் 24 மணி நேரம் இயங்க அனுமதி கேட்டுள்ளனர். திமுக ஆட்சியில் ஒண்டிப்புதூர் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க முடிவு செய்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக அதை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை வளர்ச்சி திட்டங்கள்

இதேபோல மத்திய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், புறவழிச்சாலைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலைய விரிவாக்கம் விரைந்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டது. முதலமைச்சர் ஜோசப் விஜயின் கவனத்துக்கு கொண்டு சென்று அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும். சிறுவாணி அணையை சீரமைப்பதற்கு கேரளா அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரின் 100 வார்களிலும் குடிநீர் விநியோகம் சீர் செய்யப்படும். மேற்கு புறவழிச்சாலை 2 மற்றும் 3 கட்ட திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும். லாஜிஸ்டிக் பார்க், மூலப்பொருள் வங்கி உள்ளிட்ட தொழில்துறைக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம். ஐடி, ஏஐ துறையில் அதிக கவனம் செலுத்தி கோவையை அடுத்த கட்டடத்துக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+