இடதுசாரிகள் எடுக்கும் தனிவழி... சண்முகம் அப்டேட்.. விஜய் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எதிரும், புதிருமாக இருந்த திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தவெகவை விமர்சித்து வருகின்றன. சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தவெகவை வெளியில் இருந்து ஆதரித்துள்ளன. இந்நிலையில் இடதுசாரிகள் தனி அணியாக பயணிக்க முடிவு செய்துள்ளதாக சண்முகம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இடதுசாரிகள் தான் மாற்று கொள்ளை அணி. உழைப்பாளி மக்கள் எதிர்நோக்கும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, வறுமை, குடியிருப்பு உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இவற்றையெல்லாம் முதலாளித்துவ கட்சிகளால், முதலாளித்துவ கொள்ளைகளை பின்பற்றுபவர்களால் தீர்வு கொடுக்க முடியாது.

left-parties-decided-to-travel-separate-team-said-shanmugam

நாங்கள் அதை எதிர்பார்க்கவில்லை

அதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் அது இடதுசாரி மாற்று கொள்கையுடையவர்களால் தான் செய்ய முடியும். இந்த ஆட்சி வந்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்றெல்லாம் நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. ஊத்தங்கரை எம்எல்ஏவிடம் பேரம் பேசியது தொடர்பாக வழக்கு விசாசரணை நடைபெற்று வருகிறது. விசாரணை எப்படி போகிறது என்பதை பார்ப்போம்.

வீடியோ ஆதாரம் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. மற்றவற்றுக்கு என்ன ஆதாரம் உள்ளது என்று தெரியவில்லை. முதலமைச்சர் ஏன் செய்தியாளர்களை சந்திப்பதில்லை என்று நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் அரசு தொடர்பாக எந்த தகவலும் வருவதில்லை என கூற முடியாது. அரசின் சார்பாக நீங்கள் சொல்லும் எல்லா பிரச்சனைகளுக்கும் அமைச்சர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

தனித்து பயணிக்க

ஆதிதிராவிடர் பழங்குடி நலத்துறையில், பட்டியல் மற்றும் பழங்குடி சமுதாயத்தினர் இருவரையும் பிரதிநிதித்துவப்படுப்படுத்தினர். அத்துறை பெயரை அப்படியே விட்டிருக்கலாம். பெயர் மாற்றம் எதற்கு என்று தெரியவில்லை. பெயர் என்னவாக இருந்தாலும், துறையில் என்ன செய்ய போகிறார்கள் என்பதுதான் முக்கியம். பெயர் விவாதம் அவசியமில்லை. பட்டியல், பழங்குடி மக்கள் எவ்வளவோ பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதற்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

இடதுசாரிகள் தனி அணியாக செயல்படுவது என்று முடிவு செய்துள்ளோம். அந்த அடிப்படையில் இடதுசாரிகள் கட்சிகள் இணைந்து மாநில ஒருங்கிணைப்பு குழு உருவாக்கியுள்ளோம். இடைத்தேர்தலில் அப்போதைய அரசியல் சூழல் பொறுத்து நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்று முடிவு செய்வோம். இப்போதைக்கு இடைத்தேர்தல் தொடர்பாகவோ அல்லது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவோ நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+